2-பிப்ரவரி-2015 கீச்சுகள்




உங்க படத்துக்கு U/A சர்ட்டிஃபிகேட் குடுத்திருக்காங்களே? டைரக்டர் = ULTIMATE க்கு ALTERNATIVE யாரும் இல்லைனு அர்த்தம்
   
ஏசுவோடு 2முறை பேசிஉள்ளேன்-உமாசங்கர்#ராங்க் நம்பர் போட்டா ராங்நம்பர்னு சொல்லுங்கடா.அதைவிட்டுட்டு கர்த்தர் பேசுறேன்னு இப்படியாடா ஏமாத்துவீங்க?
   
ஒரு IAS அதிகாரியவே ப்ரைன் வாஸ் பண்ணி கிறுக்கு பயலா திரிய விட்ருக்கானுங்கனா!!! இவனுங்கக்கிட்ட ரொம்ப உஜாரா இருக்கனும் போலயே :-\
   
ஏசுவோடு இரண்டுமுறை பேசியுள்ளேன் - உமாசங்கர். #எந்த நெட்வொர்க்னு சொல்லுங்கண்ணே.. நானும் மாத்திக்கிறேன்.. ஏர்டெல் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு!
   
இரண்டு முறை இயேசுவுடன் பேசியுள்ளேன்-உமாசங்கர் # ஆமா சிங்கப்பூர்ல இருந்து தான் பேசுறேன் http://pbs.twimg.com/media/B8vOxRMCMAAYaAH.jpg
   
ஏதோ ஓர் சோகத்தில் விசம் குடித்திருக்க வேண்டும் கடல்!#உடலெங்கும் நீலம் பரவி வாயில் நுரை ததும்பிக் கொண்டிருக்கிறது!
   
இயேசுவிடம் பேசுபவர்கள், அய்யனாரிடம் பேசுபவர்கள், கிருஷ்ணருடன் பேசுபவர்கள் எல்லாம் கொஞ்சம் நேரம் நல்ல டாக்டருடன் பேசுங்கடா
   
ரிசல்ட் எப்படி இருக்குமோ?ன்னு இவங்க தானே பதட்டமா இருக்கனும்? இவங்க அசால்ட்டா இருக்காங்க. அவங்க தான் பதட்டமா இருக்காங்க ;-)
   
வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க, ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க.. #Isai http://pbs.twimg.com/media/B8wrF4tCQAAU-yh.jpg
   
ட்வீட்ட பாத்து RT பண்ணுங்க ட்வீட் போட்ட ஆளு பேர பாத்து RT பண்ணாதிங்க உங்கள போன்ற ஆளுங்கலாளதான் பல நல்ல கருத்துகள்,ட்வீட்டுகள் அடக்கமாகிருது.
   
மதம் என்பது அந்தரங்க உறுப்பை போன்றது, பொது இடத்தில் அவிழ்த்து காட்டுவதை போல் அருவருப்பானது வேறில்லை....
   
176 என்பது ஓடும் நிமிடங்களாகவும் இருக்கலாம்,ஓடும் நாட்களாகவும் இருக்கலாம் # குறியீடு. எ அ
   
நித்தியையும்,ஆதீனத்தையும் பேசும்போது பகுத்தறிவா தெரிஞ்சது,உமாசங்கரை சொன்னதும் இந்துமத வெறியா மாறிடிச்சி#நல்லா இருக்குடா உங்க நியாய தர்மங்கள்
   
நஸ்ரியாவையும் ரசிக்கிறீங்க நயன்தாராவையும் ரசிக்கிறீங்க ஏமிஜாக்ஙனையும் ரசிக்கிறீங்க #அப்பரம் என்னடா உங்களுக்கு புண்ணாக்குமதம் வேண்டி கிடக்கு?
   
எல்லா கம்பெனியும் சம்பளத்து மேல தான் வேலை வாங்கும்,நாமதான் சம்பளம் போக மிச்ச நேரத்தை ஓப்பியடிக்கனும்
   
வீட்டை பூட்டிட்டு போறீங்க,சரி!, WIFIயையும் அநியாயமா ஆப் பண்ணிட்டு போறீங்களே, இது தான் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நீங்க கொடுக்குற மரியாதையா?
   
ஏம்ப்பா சாமி நோய் மட்டுந்தான் குணப்படுத்துவாரா, இந்த ஜிம்மிற்கு போகாமலேயா உடல் எடை குறைய, கூட்ட ஏதும் பண்ணமாட்டாரா.
   
ஜோசியர் பேரு என்ன? மெய் மெய்யப்பன் டேய் இது செத்து போனவன் ஜாதகம்டா
   
ரஜினி உளறுவாரு. ஆனா நல்லா பேசுற மாதிரி தெரியும். கமல் நல்லாதான் பேசுவாரு. ஆனா உளர்ற மாதிரி தெரியும்..
   
இனி ஏசு விடம் பேச 1 ஐ அமுக்குங்க முருகனுடன் பேச 3 அமுக்குங்கன்னு காசை புடுங்குவானுக பாருங்க அத சகிச்சுக்வே முடியாது
   

0 comments:

Post a Comment