6-செப்டம்பர்-2014 கீச்சுகள்
முன்பெல்லாம் ஊருக்கு போறேன் என்றால் சொந்தக்காரங்க வீட்டுக்கு போகிறோம் என்று பொருள்.இப்போது ஊருக்கு போறேன் என்பது சொந்தவீட்டிற்கு போவது :(
   
சகிப்புத்தன்மை என்பது மனதுக்குள்ளேயே திட்டிக்கொள்ளும் குணம்
   
தூங்குற மாதிரி நடிக்கும்போது மட்டும் ஏன் அங்கங்க அரிக்குதுன்னு தான் புரிய மாட்டேங்குது
   
எவன் சிரிப்ப அடக்க முடியாம, வெளிய விழுந்து விழுந்து சிரிக்கரானோ! , அவனுக்கு எவ்வளவு பெரிய வலி'யையும் வெளிய விடாம உள்ள வச்சி அழத்தெரியும்!
   
பேஸ்புக் , டுவிட்டர், எஸ் எம் எஸ் பார்க்காமல், செல்போன் கையில் இருப்பதை மறந்து ஒரு சினிமா பார்த்தால் அது நல்ல படம்.
   
நண்பர்களே தயவுசெய்து சார்ஜரில் போட்டு போன் பேசாதீர்கள்#என்ன அவசர அழைப்பாக இருந்தாலும்... http://pbs.twimg.com/media/BwvmcmyCMAAXe9j.jpg
   
இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் 18-செப்-1985-ல் #kamalhaasan தலைமையில் கமல் ரசிகர்கள் கண்டன ஊர்வலம் http://pbs.twimg.com/media/BwwXMNPCMAArb67.jpg
   
லேட்டா ஸ்கூல் போகற நாளில் கேட் கிட்ட போறப்பவே வயித்துக்குள்ள ஒரு ரசாயன மாற்றம் நடக்குமே அதை வர்ணிக்க வார்த்தையேயில்லை
   
'நீ தான் என் உயிர்' என்றவர்கள், பின் மயிராப் போச்சு என்று விலகிச் செல்கையில் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்த்துகிறார்கள்
   
ஒருத்தன் பைக்ல "இயேசு நல்லவர் "னு மட்டும் எழுதி வெச்சுருக்கான் - இயேசு கெட்டவர்னு யாரோ அவன்கிட்ட ரொம்ப வாக்குவாதம் பன்னிருப்பன் போல பாவம்
   
நாம் நெருங்கி செல்லும் போது உதாசினப்படுத்தும் உறவுகளை முற்றிலும் புறக்கணிக்கவே தோன்றுகிறது
   
நாம் குறைந்தது ஒரு நல்ல மற்றும் ஒரு மோசமான ஆசிரியரைக் கடந்திருப்போம். ஆனால், இருவரிடத்திலும் பாடம் கற்றுக்கொண்டோம்தானே!
   
காந்திய வழியில் அம்மா ஆட்சி-கட்டுரை போட்டி தலைப்பு#எந்த வழியில் போனாலும் டாஸ்மாக்தான் தெரியுது,அப்புறம் எப்படி காந்தி வழி?
   
பள்ளிக்கூடத்துல வாத்தியாரா சூசைட் பண்ண தூண்டியதெல்லாம் இன்னைக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு திரியுது
   
கத்துக் கொடுக்குறவன் தான் ஆசிரியன்னா கண்ல படுற அத்தனை பேரும் நமக்கு ஆசிரியன்தான்.
   
சிட்டுக்குருவி லேகியம்,தங்கபஸ்பம் எல்லாம் விக்கிற வைத்தியர்கள் கடையை மூடிட்டு மரியாதையா போயிடுங்க#இந்திய மருத்துவ இயக்குனராக சகாயம் நியமனம்
   
"பார்க்க சின்னப் பையனா/பொண்ணா இருக்கியே?" என்ற கேள்வி இருபது வயதுக்காரர்களை எரிச்சல் படுத்தும். நாற்பது வயதுக்காரர்களை குஷிப்படுத்தும்!
   
மிகவும் அவலமான கையறுநிலை என்பது.. பாசமோ,அன்போ,காதலோ கிடைக்காத மனதில் தானாக சென்று என் மீது அன்பு செலுத்துங்கள் என்ற சொல்ல முடியாம தவிப்பது.
   
Lady paid/professional killer கேரக்டர் தமிழ்சினிமால வந்திருக்கான்னு கேட்டு ஒரு FB போஸ்ட். அதுல ஒருத்தர் கமெண்ட் "கருத்தம்மா கிழவி " :))
   
சமுகத்தை கெடுக்கும் பேஸ்புக்கை தடைசெய்யுமா அரசு-குமுதம்#சமூகத்தை நீண்ட காலமாக கெடுத்துவரும் குமுதத்தை தடைசெய்யுமா அரசு -மக்கள்
   

0 comments:

Post a Comment