12-செப்டம்பர்-2014 கீச்சுகள்




ஐபோன் அருமையா இருக்குன்னு நம்பறது, பணக்காரங்க எல்லோரும் சந்தோஷமா இருக்கான்னு நம்புற மாதிரி
   
இரண்டாவது முறையும் ஒருவர் நம்மை அவமானப்படுத்துகிறார் என்றால் தவறு நம் மேல் தான்...
   
எமது பாரதியை மிதித்து கொன்றதால் தான் யானையே, உனது இனம் இன்னும் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிகிறது.! -கமல்ஹாசன் #பாரதி நினைவுதினம்
   
Viswaroopam Releaseகு எதிர்ப்பு தெரிவிச்ச எத்துண அமைப்பு, இந்தியால 'Al Qaeda' Branch Open பண்ணுவேனு சொன்னதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க??
   
எப்பொழுதும் கடவுளையே நம்புவது இயலாமையின் வெளிப்பாடே தவிர மூட நம்பிக்கை அல்ல.
   
நடிகர்களை பற்றி பேசும்பொழுது அஜித் ரசிகர்களைத்தவிர மற்றவர்கள் ஒரு அளவுக்குமேல் தன் நடிகரைப்பற்றி உயர்த்தி பேசமுடியால் அடங்கிவிடுகின்றனர்.
   
முருகன் உண்மையிலே உலகம் சுற்றியதால் ஃபிட்னஸாகவும், பிள்ளையார் வீட்லயே சுற்றியதால் தொந்தி போட்டுருச்சு போல
   
ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாத நட்பும்.... உரிமையை எடுத்துக் கொள்ளாத காதலும்.... உண்மையான உறவாக எப்போதுமே இருக்க முடியாது.... உண்மை உறவு....
   
கூடபடிச்சவன் நம்மளவிட அதிகமார்க் எடுத்தப்ப கூட வராத ஃபீலிங்க்ஸ் ,நம்மளவிட சீக்கிரம் கல்யாணம் பண்றப்போ வந்து தொலையிது ;))
   
செத்த மாட்டின் தோலில் செய்யும் பறை தீட்டு! உயிருள்ள பட்டுப்புழுவை கொன்று நெய்யும் துணி புனிதம்! - ஜெயந் பிரபாகர்
   
நண்பனை 'மச்சான்னு' கூப்ட்டு அவன் தங்கையை நமக்கும் 'தங்கை' என்று பார்க்கும் ஒர் உறவுமுறையை தாய் சொல்லித் தரவில்லை #நட்பு_சொல்லித்_தந்தது
   
இனி கவலை வேண்டாம்! நான் இருக்கிறேன் என கைகள் பற்றி ஆறுதல் கூறுகிறார், தல, தளபதி போன்ற பட்டங்கள் அற்ற நிஜ ஹீரோ. http://pbs.twimg.com/media/BxO0qf2CMAAo6ju.jpg
   
தீயென தமிழை திமிருறச் செய்த பாரதி நினைவு தினம் இன்று.! http://pbs.twimg.com/media/BxN3molCUAEPzPf.jpg
   
மனிதனுக்குத் தான் அது மயிலிறகு; மயிலிற்கு அது வெறும் மயிர்தான்!
   
எல்லார்ட்டையும் நல்லா பேசி, நம்ம கிட்ட மட்டும் எரிஞ்சு விழறாங்கன்னா , ஒண்ணு நம்மள ரொம்ப பிடிக்கும் , இல்ல சுத்தமா பிடிக்காது.
   
தன்னை ஒரு ஆண், `கவனித்துக் கொண்டிருக்கிறான்` என்பதை உணர ஆரம்பித்தாலே,எந்தப் பெண்ணும் ..அழகாகி விடுவாள்!
   
தெரியாதவங்க பேரெல்லாம் "எக்ஸ்க்யூஸ் மீ" என்றாகி விடுகிறது
   
அம்மாவின் தோளில் கைபோடும் உரிமை கொஞ்சம் வளர்ந்ததும் கிடைத்துவிடுகிறது.அப்பாவின் தோள் மேல் கைபோடும் உரிமை அவர் தளர்ந்த பின்னரே கிடைக்கிறது.!
   
வீட்டு வாசலில் கூடையை இறக்கி சங்கரா சுறா வஞ்சிரம் என்றாள்.வெட்கமாயிருந்தது.செத்தப் பிறகும் மீனுக்குப் பெயருண்டு.நாமெல்லாம் பொணம் #ரசித்தது
   
ஒரு பெண்ணின் அழகு திரும்ப மட்டுமே வைக்கும், அன்பு தான் விரும்ப வைக்கும். #மீள்
   

0 comments:

Post a Comment