2-ஜூலை-2014 கீச்சுகள்
தூக்கத்தில் உளரும் பிள்ளையைத் தட்டிக் கொடுக்கும் போதெல்லாம், உலகில் உள்ள யாருமற்ற அத்தனை குழந்தைகளையும் நினைத்து பெருமூச்செறிகிறேன்!
   
ஆட்டுக்கறிக்கு மயங்கிய நம் முன்னோர்கள் புத்திசாலித்தனமாக அதை எந்தக் கடவுளுக்கும் வாகனமாக்காமல் விட்டுவிட்டார்கள் போல...
   
குரங்குல இருந்து தான் மனுசன் உருவானானு ஓட்டல் பார்சல் முடிச்சியையும்,ஹெட்போன் சிக்கலையும் அவிழ்க்கும் போது தான் தெரியிது #பொறுமையே இல்ல
   
வருத்தங்களை அப்பட்டமாய் காட்டிக்குடுக்காத கண்களையாவது பெற்றிருக்கலாம்..
   
ஹீரோக்கள் ஃபுட்போர்டிலும், ஹீரோய்ன்கள் ஜன்னல் ஓரத்திலும் உருவாகிறார்கள்!
   
சைக்கிள்லே போறது கேவலமானதுக்கு பொறவு, எம்பதாயிரம் கொடுத்து பைக் வாங்குனதுக்கு பொறவு, எண்ணெய் விலை ஏறிடுச்சுனு பொங்குனா...மனசாட்சி இருக்கா?
   
எப்பவும் உண்மையே பேசி வந்தால் அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு என்றிருக்காது. தைரியமாக எல்லோரையும் எதிர்கொள்ளலாம், நிம்மதியாக இருக்கலாம்.
   
"ஏங்க, நான் த்ரிஷா மாதிரி ஆகறத்துக்கு என்ன பண்ணனும்?" "த்ரிஷாக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தை பிறக்கறவரை வெயிட் பண்ணனும்" ;-)
   
ஒருவேளை கஞ்சி மட்டுமே குடித்து உயிர்வாழும் ஏழைக்கு தினம் தினம் ரம்ஜான் நோம்புதான் !!
   
பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியுமான்னு தெரியலை. ஆனா கண்டிப்பா அடுத்தவங்களுக்கு குடுக்க முடியும்.
   
தங்களுடைய புருவத்தை திருத்தினாலே ஆயிரம் விமர்சனங்கள் இதுல பெண்கள் உலகத்தை திருத்துறேன்னு கிளம்பினா சொல்லவா வேணும்
   
போலிஸ்காரர் நின்னா தான் அது one way, அவர் இல்லன்னா அது உன் way...!! #இந்தியன்
   
அடுத்தவங்களுக்கு கேக் ஊட்டும்போது, ஆட்டமேடிக்கா நம்ம வாய் ஓப்பன் ஆகுறதுதான் அனிச்சை செயல்.!
   
விஜயின் சூப்பர் ஸ்டார் பட்டம் திரும்ப பெறுகிறது குமுதம்.#அவரு அக்காவை வெச்சா வாங்குனாரு?சொந்த காசுலதான வாங்குனாரு.அது பொறுக்கலையா?#கிரி mmnt
   
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கபடுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்க படுவார்கள் !! சேகுவாரா
   
மழை பெஞ்சா கூட எங்கம்மா தல நனையக் கூடாதுன்னு தான் கவலைப்படுவாங்க #தலடா
   
இப்ப தமிழ்நாட்டுல ரொம்பக் கஷ்டமான விஷயம் இன்ஜினியரிங் படிச்சவனுக்கு வேலை கெடைக்கறதும், அதுக்கப்புறம் ஒரு பொண்ணுக்கு புருஷன் ஆவறதும் தான்.
   
படித்த முட்டாள்களே, பலர் உயிர் பறி போக காரணம். -முகிலிவாக்கம் கட்டிட விபத்து http://pbs.twimg.com/media/BrZBbkZCMAASmGn.jpg
   
யாரு சிக்ஸ் அடிச்சாலும் 'தோனிடா' சொல்ற மாதிரி, யாரு கோல் போட்டாலும் 'மெஸ்ஸிடா' சொல்றாங்க # பூரா நம்ம பயகடா
   
ஒரு பெண்ணை உண்மையாக நேசிக்கும் ஒருவனால் அவளை அடுத்த ஆண்களுடன் சேர்த்து பேச முடியாது எந்த சந்தர்ப்பங்களிலும்...
   

0 comments:

Post a Comment