3-ஜூலை-2014 கீச்சுகள்
அந்த காலத்தில் ராஜராஜன் எந்த வசதியும் இல்லாமல் கட்டிய கட்டிடத்தின் நிழல்கூட கீழே விழுவதில்லை! இப்ப கட்டினால் கட்டடமே விழுவுதடா!! #டேய்
   
''கவலைப் படாதீங்க..நாங்க இருக்கோம்"ன்னு தான் சொல்றாய்ஙகளே தவிர,"கவலைப் படாதீங்க..நீங்க இருப்பீங்கன்னு..எந்த டாக்டரும் சொல்லக் காணோம்!
   
என் தெருல பூ விக்கிற ஆயாகூட டேபில்மேட் வாங்கிடுச்சி இன்னும்யாரு வாங்கனும்னு சொன்னா நானே வாங்கிறேன் ஆனா அந்த டொக் டொக்கை நிப்பாட்டுங்கடா..
   
ஒரு பெட்டிக்கடைக்காரன் ஏழை என்று அவனிடமே பொருள் வாங்கினேன் அவன் நான் பணக்காரன் என நினைத்து அதிக விலை வைத்து ஏமாற்றுகிறான், என்ன உலகமிது..
   
ஓர் ஒரு ரூபாய் நாணயம் தனக்குத் தோதான நெற்றி தேடி பயணப்படுகையில்தான் குறுக்கே வந்து விழுந்தான் செல்போன் பேசியபடி
   
உங்க வீட்டு விஷேசத்துக்கு முதல்ல இன்வைட் பன்னுங்கடா அப்புறம் கேண்டி க்ரஷ் விளையாட இன்வைட் பன்னலாம்.
   
எல்லாட்டையும் கூழைக்கும்பிடு போடாம பிடிச்சவங்கள்ட்ட கூட சரி தவறுகளை தைரியமா பேசுற அளவுக்கு தன்மானத்தோட வாழ்ந்துட்டாலே பெரிய சாதனை தான் :))
   
அர்ஜென்டினா இவ்வளவு தாமதமாக கோல் அடிக்க காரணம், முந்தைய திமுக அரசு சரியாக திட்டமிடாததே
   
தாடி வைத்த புத்திசாலி ஆணை பிடிக்கும்! - ஸ்ருதிஹாசன் # இவங்க எதிர்பார்க்கிற தகுதி திருவள்ளுவர் ஒருத்தர்கிட்டதான் இருக்கு!
   
சிலர் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் அவர்கள் சுதந்திரத்தை பறிக்கிறோம் என்ற பெயர் வந்துவிடுகிறது..!!
   
இன்றைய மருத்துவத்தில் பிழைத்து கொள்பவர்கள் மருத்துவர்கள் மட்டுமே -ப.பி
   
எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு சிரிக்கிறீர்கள் ..! உங்கள் ஏளனம் எனக்கான சிறகுகளை தருகின்றன..!
   
பதின்ம வயதுகளைக் கடப்பதற்கு முன்பு வரை "ஏன் பிறந்து தொலைத்தோமோ" என எந்த பிறந்தநாளின்போதும் கவலைப்பட்டதில்லை.
   
அம்மாக்கு போன் பண்ணி சிக்கன் குழம்புல எவ்வளவு சக்கரை போடனும்னு கேட்டா தான், நான் கஷ்டபடுறேன்னு, கல்யாணம் பண்ணிவைக்கனும்ன்ற அக்கறை வரும்..
   
காரணங்கள் பலகூறி காரியங்களை செய்யாமல் ஒதுங்குவதை விட அதே காரணங்களை அடிப்படையாக கொண்டு அந்த காரியங்களை வேறு வழியில் செய்து முடிப்பதே சிறந்தது
   
"தான் கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவன், தன் வாந்தியை திரும்பத் தின்னும் நாயைப் போன்றவன்" - நபிகள் நாயகம்
   
சுமப்பது அழுக்குத் துணியா,வெளுத்ததா என்ற கவலை கழுதைக்கு இல்லை!
   
சார்.உங்க பேங்க் ல கரன்ட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும் அது அடிக்கடி போய்டும்.யூபிஎஸ் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிக்கறீங்க்ளா?
   
நிறைய வரம் கிடத்தால் அதில் முக்கியமானது.வாழ்நாளில் ஒருநாள் தலய பார்க்கணும். ஒரே ஒரு வரம் கிடைத்தால்...? அதுவும் தலயை பார்த்தே ஆகணும் என்பதே
   
நானும் தமிழ்நாட்டு காரன் தான்டானு நெஞ்சை நிமிர்த்தி சொல்லுபவர்கள் RT பண்ணவும் அவ்வ்வ் ;-)
   

0 comments:

Post a Comment