18-ஜூலை-2014 கீச்சுகள்
என்னது சில்வர் ஸ்டாரா?? அடங்கொன்னியா. புதுசு புதுசா கெளம்புறாங்ளே! #fb http://pbs.twimg.com/media/BsvUFVNCQAIz7sx.jpg
   
நிராகரிக்கப்படும்போதெல்லாம் நம்மால் நிராகரிக்கப்பட்டவர் யாரேனும் நினைவில் வருகிறார்
   
"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார்
   
சைக்கிள் கத்துக்கும் போது விழுந்தா விழாம கத்துக்க முடியாதுப்பான்னு தட்டி கொடுக்கும் சமூகம், இங்கிலீசுல க்ராமர் மிஸ்டேக் பண்ணா கலாய்க்குது.
   
நாம நல்லா வாழனும்னு நினைக்கிறது அப்பா, நமக்காக வாழனும்னு நினைக்கிறவங்க அம்மா, நம்மளோட நல்லா வாழனும்னு நினைக்கிறது மனைவி.!
   
எழுத்தாளன் தன் அறிவை எழுதுகின்றான். வாசகன் தன் அறிவைப் படிக்கின்றான்.
   
பணக்காரி கவரிங் நகை போட்டாலும் தங்கம்னும்..ஏழை தங்கநகை போட்டாலும் கவரிங்கும்னுதான் உலகம் நினைக்கும் ..இவ்ளோதான் வாழ்க்கை
   
பல மகிழ்ச்சிகளை இழந்து பணம் சம்பாதித்த பிறகு எல்லோரும் உணர்வது பணத்தில் மட்டுமே மகிழ்ச்சி இல்லை என்பதையே...
   
சண்டைபோட்டுட்டு உன்கூட பேசாமஇருக்கும் உன் மனைவியை உன்கூட பேசவெக்க வீட்டுல எல்லா பைப்பையும் டைட்டா மூடிடு. தொறக்க உன்ன கூப்டுத்தான் ஆகணும்:-/
   
"நான்னெல்லாம் ரொம்ப சாதாரண ஆள்" அப்படின்னு ஆரம்பிச்சு, அவர் எவ்ளோ பெரிய ஆள்னு பதிலுக்கு இன்னொருத்தர் சொல்ல, கேட்டு ரசிக்கிறாங்க :0
   
'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறக்கிறேன்: நடிகர் சிம்பு #கவர்மென்ட் ஜாப்ப..........;))))) http://pbs.twimg.com/media/BswNacpCMAAkR_0.jpg
   
சிலரை மிக அதிகமாக பிடித்து போவது பின்னாளில் பிடிக்காமல் போவதற்கான அறிகுறி....!!
   
சாமிக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி ஒரு ஏழையின் பசிக்கு உதவுடா மூடனே
   
'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறக்கிறேன்: நடிகர் சிம்பு # படிச்சு கஷ்டப்பட்டு வாங்குன ஐஏஎஸ் பட்டம் பாருங்க.நாமளாப்போட்டுக்கறதுதானே?
   
எனக்கு இப்பவே, இங்கயே முதலிரவு நடந்தாகணும்... புது மாப்பிள்ளைகள் கதறல் ;))))))))) http://pbs.twimg.com/media/BsuF4RHCAAAq3LD.jpg
   
என்னதான் வாழ்க்கைய பத்தி கலர்கலரா கனவு கண்டு வச்சிருந்தாலும் கடைசில 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்'னுட்டு போயிடுது விதி..!
   
ஆணை பிறப்பிக்கும் வல்லமை உடையவள் பெண் மட்டுமே. :))
   
வேலைக்கு போறது ஒரு பாவச்செயல் ரேன்ஞ்சிக்கி இருக்குது தனுஷ்,சிவகார்த்திகேயன் கேரக்டர்கள் :-))
   
திரும்பினால் இடித்துக் கொள்ளுமளவு அருகேதான் இருக்கிறோம்... திரும்புதல் யதேச்சையாக அமையத்தான் காத்திருக்கிறோம்
   
நல்ல வேளை எடை மெஷின்கள் வருத்தங்களை எடை போடுவதில்லை; போட்டிருந்தால் எல்லோரும் ஓவர் வெயிட்டாகவே இருந்திருப்போம் !!
   

0 comments:

Post a Comment