13-ஜூலை-2014 கீச்சுகள்
ஆத்திகனாய் இருப்பதில் ஒரு லாபம்.நாம் என்ன தவறு செய்தாலும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்ள ஒன்பது பேர் கொண்டகுழு (நவக்கிரகங்கள்) தயாராக இருக்கும்
   
உன் நண்பன் என்ன ஜாதினு யாராவது கேட்டா தெரியலனு திருதிருனு முழிப்பதில் வாழுது உண்மையான நட்பு.
   
டுவிட்டர் 3 வகைப்படும் 1.தல-தளபதி ரசிகர் சண்டை 2.ராஜா-ரஹ்மான் ரசிகர் சண்டை 3.மேல இருக்கறவங்க போடுற சண்டைய அமைதியா வேடிக்கை பாக்கறவங்க.
   
காலில் ஈரம் படாமல் கடலை கடக்கலாம் ஆனால் கண்ணில் ஈரம் படாமல் வாழ்கையை யாரும் கடக்க முடியாது...
   
ஒருவன் ஒருவன் முதலாளி பாட்ட மியூட்ல வச்சுப் பாத்தாலும், வரியெல்லாம் தெளிவாப் புரியுது #ரஜினி காதுகேளாதோர் செய்தி வாசிப்புகள்
   
எப்படி எல்லாம் வாழ கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். "ஆகவே இப்படிதான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு. -கவிபேரரசு
   
புறாக்களிடையே நடக்கும் சண்டைக்கு யார் சமாதான தூது செல்வார்கள்
   
பாடல் எழுத வருவதற்குமுன்பு அனைத்திந்திய வானொலியில் வாலி வேலை செய்தார். வந்த பிறகு அது அவருக்கு வேலை செய்தது!
   
கேண்டிகிரஷ்லாம் விளாண்டதில்லைனு சொன்னா என்னது உங்களுக்கு உடலுறவுல நாட்டமில்லையான்ற ரேஞ்சுல பாக்கறானுக.
   
பெண்கள் அழகாய் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை, அழகாய் கான்பித்துக்கொள்ள தெரிய வேண்டும் + கொஞ்சம் தன்னம்பிக்கையும் சிரிப்பும்! :)
   
இந்த சமுதாயம் எதை சொன்னாலும் நம்பும் , ஆனா நான் திருந்திட்டேன்னு சென்னா மட்டும் நம்பவே நம்பாது !
   
தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கடற்கரைக்குப் போனேன்!அலைகள் காலில் வந்து விழுந்தன!#திரும்பி விட்டேன்!
   
ஸ்கூல்ல போர்ட் அழிக்க வீட்ல டஸ்டர் தச்சு கொண்டு வந்த கடைசி தலைமுறையும் நாம தான்.
   
இது காலத்தோட கட்டாயம், கேட்டு தனியா போய் பாத்ரூம்ல அழுங்க... https://soundcloud.com/pandian-siva/kanne-kalaimane
   
தன் மனைவியாக போறவள் இப்படி இருக்கவேண்டுமென்ற டிமாண்ட் படிப்படியாக குறைந்து 32 வயதில் ஏதோ பெண் கிடைத்தால் போதுமென்ற மனநிலைக்கு வரவைக்கும்
   
அனைவருக்கும் விடுமுறை உண்டு...! ஆனால் அம்மாவுக்கு மட்டும் என்றுமே விடுமுறை இல்லை சமையலறையிலிருந்து...!!
   
எனது உழைப்பினால் நான் கொண்ட வியர்வைத் துளிகள் தான் என் முகத்திற்கு பூசியுள்ள அழகு சாதனப் பொருள்
   
கிடைத்த உணவை கோபத்துக்காக நிராகரிப்பவர்கள் கிடைக்காத ஒன்றுக்காக கடவுளின் மீது கோபப்பட தகுதியற்றவர்கள்
   
சுயம் மாற்றாத உறவை விட்டுவிடாதீர்கள். கிடைப்பது மிக அரிது.
   
அவள் நிர்வாணமாக இருந்தாலும் அவள் கண்ணை பார்ப்பது காதல். உடை அணிந்திருந்தாலும், அவளை நிர்வாணமாய் பார்ப்பது காமம்.
   

0 comments:

Post a Comment