21-ஜூலை-2014 கீச்சுகள்
ராம் திட்டுனத வச்சே வெளம்பரம் தேடிகிட்டாங்க விஜய்டிவி... ராம் நீங்க அச்சன்கோவிலுக்கே போயிருங்க.
   
நடிச்சு அவார்டு வாங்குனா விஜய் சேதுபதி, அவார்டு வாங்கும்போது நடிச்சா அது அண்ணா விஜய் #AjithismisBeyondanyAwards
   
நடுநிலையான, நேர்மையான விருதுகள்னு அவங்களே சொல்லிக்கிறாங்க # தட் 'பேரென்ன? கவரிமான்ராஜா' மொமன்ட்
   
மை டியர் சன்டிவி, விஜய் அவார்ட்ஸ மக்கள் பார்க்காம இருக்கனும்னா, ஒன்னு நீங்க மருதநாயகம் போடனும், இல்ல மங்காத்தா போடனும்
   
சிவா லேசா அழுதாலும் நமக்கு கண் கலங்குது,விஜய் ஒரு நாள் ஃபுல்லா கக்கூஸ்ல அழுதாலும் சிரிப்புதான் வருது
   
விஜய் அவார்ட்ஸுக்கு தரரீதியாய் எந்த மதிப்பும் இல்லை. சினிமா பிரபலங்களை ஓரிடத்தில் பார்க்க, சில சுவாரஸ்ய நாடகங்களை ரசிக்க அது ஒரு தளம்.
   
த்தா யுவன்டா! #போடா மயிறுங்களா உங்க அவார்டு எவனுக்கு வேணும்ங்குற மாதிரி ஒரு நக்கல் சிரிப்பு
   
வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்து தான் பேசனும்னு இல்லடா, வராமையே பல பேர தன்னை பற்றி பேச வைக்க முடியும் # தலடா #விஜய் அவார்ட்ஸ்
   
தனுஷ் : மத்தியவர்க்க இளைஞர்களின் மனசாட்சி :-) # பிறவிக்கலைஞன்
   
தேசிய விருது என்பது ஜனாதிபதி விருது..விஜய்டிவி விருது என்பது பங்சனுக்கு வர்ரவங்களுக்கான விருது #VijayAwards
   
விஜய்யையும் சிகாவையும் பக்கத்து பக்கத்துல நிக்க வைக்காதீங்கய்யா. தளபதி பெர்சனாலிட்டி கம்மியா தெரியுதுல?
   
#VijayAwards உங்களையெல்லாம் ஆயிரம் 'கற்றது தமிழ்' ராம் வந்தாலும் மாத்த முடியாது :-/
   
ஹாட்ஸ் ஆப் ராம். #இது அவார்டு கெடக்கலைங்கற ஏக்கம் இல்ல. நீ குடுக்கலைன்னா என்னோடது தாழ்ந்தது இல்லைங்கற தைரியம். #உண்மைக் கலைஞன்
   
அடுத்ததாக தன்னடக்கத்துடன் பேசுவது எப்படி என்பதை சூர்யா அவர்கள் நடித்துக் காட்டுவார்!#விஜய் அவார்ட்ஸ்
   
நீங்க காசு குடுத்து அவார்ட்ஸ் வேணா வாங்கலாம்.. See இந்த ஆரவாரம்,அன்பு,கைதட்டல் ம்ஹூம்.. அந்த பெயருக்கு மட்டுமே அவ்ளோ மாஸ்...;) #தலடா..
   
விஜய் டி.விய ரெம்ப ஓட்டாதீங்கடா... சாயங்காலம் கும்கி போட்டு கழுத்தறுத்துற போறாய்ங்க :-////
   
புதிதாய் நடை பழகின குழந்தையை பிடிக்க துரத்தினால் ஓடத் தெரியாததால சட்டென முட்டி போட்டு வேகமாய் தவழ்ந்து விரைகிறது:-)
   
அரசு பள்ளியில் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
   
தனுஷின் நடிப்பை பற்றி சிலாகிப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றைதான் செல்வராகவன் என்ற ஒரு இயக்குனன் இ்ல்லையென்றால் தனுஷ் என்ற நடிகனே கிடையாது
   
பொள்ளாச்சி ;-)))) கோவையின் சொர்க்கம் http://pbs.twimg.com/media/Bs_7sTxCAAALjNi.jpg
   

0 comments:

Post a Comment