14-ஜூலை-2014 கீச்சுகள்




#நடிகனிடம் ஒழுக்கத்தை எதிர்பார்பதே பெரிது,அதுவும் அவரிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்வது ஒரு வரம்,அது #அஜித் ரசிகர்களுக்கு வாய்த்திருக்கிறது!
   
என் முதல் attempt in சிறுகதை :-) 'கண் அவன்' http://amas32.wordpress.com/2014/07/13/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ நிச்சயம் வித்தியாசமான கதை!
   
ஃபிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? தி"லீப்" :-)
   
தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்றத விட... நல்லது செய் கடவுள் உன்ன பாதுகாப்பார்னு சொல்லுங்க #முக்கியமா குழந்தைகள்ட்ட சொல்லுங்க #100RT
   
ஃபுல் மப்பில் ஒரு ஆண் எதிர்வருகையில் பெண்களுக்கு வரும் அருவருப்புக்கு ஈடானது- ஃபுல் மேக்கப்பில் ஒரு பெண் எதிர்வருகையில் ஆண்களுக்கு வருவது!
   
அதிகமாய் உழைத்து கஷ்டப்படுவதைவிட மிதமாய் உழைத்து நலமாய் இருக்கலாம். ஆம், மரம் வெட்டுவதைவிட நடுவது எளிதுதானே!
   
ஒவ்வொரு அடகுக்கடைகளிலும் உலர்ந்து கொண்டிருக்கிறது பிரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி -நா.முத்துக்குமார்
   
ஒரு படம் சிறந்த படமாகனும்னா ஒண்ணு அவனுங்க மென்டலா நடிக்கனும் இல்ல நம்மல மென்டலா ஆக்கனும் #..அவ்வளவுதான்
   
என் இரு சக்கர வாகனத்தை வேகமாக முந்தியபடி அருகில் வந்து "சார் சைட் ஸ்டாண்ட்" என்று சொல்லியபடி கடந்து சென்று புள்ளியாய் மறைந்தார் கடவுள்!!!
   
யார்யார் வீட்ல கார் இருக்கு?னு கேட்டு கிராமத்துப்பெண்களை அவமானப்படுத்தும் நகரத்துப்பெண்கள்ட்ட " யார் யார் வீட்ல கற்பு இருக்கு?னு கேட்கனும்
   
உலகின் தலைசிறந்த ஊடகத்தின் பார்வையிலும் சாவதற்கும் கொல்லப்படுவதற்குமான இனவேறுபாடுகள் உண்டு!! :( http://pbs.twimg.com/media/BsbCL2tCMAADKX3.jpg
   
கணவர்தான் குடும்பத் தலைவர் என அவரை நம்ப வைத்து விடுவதில் இருக்கிறது மனைவியின் புத்திசாலித்தனம்.
   
மற்வர்க்கு நாம் நல்லவனாக இருக்கிறோமோ இல்லையா என்பதை விட நம்முடைய மனச்சாட்சிக்கு நல்லவனாக இருக்கிறோமா என்பதே முக்கியம் !
   
பெற்றோருக்காக, கணவனுக்காக, குழந்தைகளுக்காக வாழ்ந்த பெண் ஓய்வெடுக்க நினைக்கையில் அவளுக்கான நேரம் முடிந்துவிடுகிறது #வாழ்க்கை
   
தனித்திருப்பவனுக்குதான் கடிகார சத்தம் துல்லியமாய் ஒலிக்கிறது,தனித்திருபவனுக்குதான் ஒற்றை எறும்பின் பயணம் முழுதாய் புலப்படுகிறது !
   
உலகமே எதிர்த்தாலும் உனக்கு நாங்க இருக்கோம் தலன்னு தல ரசிகர்கள் மாஸ் காட்டிய படம் opening பார்த்து தமிழ் நாடே அரண்டு போச்சு ! #2YearsOfBilla2
   
பேஸ்புக்கில் எனது ட்வீட்டை மற்றொருவன் status ஆக கண்ட கணத்தில் உணர்ந்தேன் திருட்டு விசிடியின் வலியை... ;-(((
   
இலையில் சோறை போட்ட வுடன் கொஞ்சம் வெறும் சோத்தை தின்று தன் வெட்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த பசி!!
   
சரக்கடிச்சாலே இசைஞானி பாட்டுதான்...! ஆரோமலேஏஏஏஏஏஏ
   
பாடத்தைக் காப்பியடிக்கிறது தப்புன்னு சொல்ற பெற்றோர்கள்தான், இன்னொரு பிள்ளையை உதாரணமா காட்டி அதமாதிரியே காப்பியடிக்கச் சொல்றாங்க!
   

0 comments:

Post a Comment