17-ஜூலை-2014 கீச்சுகள்
((((உடனே பகிருங்கள் நண்பர்களே)))) தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை. தொடர்பிற்கு திரு.சுகன் 8883640640 http://pbs.twimg.com/media/BslY36mCMAEt2nX.jpg
   
ரிப்பேரான பெட்ரோமேக்ஸை சரி பண்ணி வாழ்க்கைக்கு சின்னதாய் ஒளியேற்றும் கணத்தில் "இதுல எப்டிண்ணே லைட்டெரியிது?" என்றவாறு கடவுள் வந்தடைகிறார்!
   
காமராசர் இறந்தபோது வீட்டை அரசு எடுத்துக்கொண்டது, காரை காங்கிரஸ் எடுத்துக்கொண்டது.ஆனால் அவர் பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது
   
இந்த குழந்தை உடுப்பி ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது முடிந்த வரை பரப்புங்கள், பெற்றோருடன் சேர... http://pbs.twimg.com/media/BsqCFTYCIAANvpD.jpg
   
முதல் சிறுகதை : ஆதரவு தருக மக்களே _/|\_ குருவிக்கூடு : இயற்கை http://karnasakthi.blogspot.com/2014/07/blog-post_15.html?spref=tw
   
விளையாட்டாய் பேச்சை துவங்கி...இன்று அது முழு வடிவம் பெற்றுள்ளது. சமையல் குறிப்புகளுக்கென ஒரு தளம்! http://koottansoru.com/ #கூட்டாஞ்சோறு
   
கார்ப்ரேட் கம்பெனில பெரிய பொஸிஸன்ல இருக்குறவங்கள பெரும்பாலானோர் அரசுமேனிலைப்பள்ளில தமிழ் மீடியத்துல படிச்சவங்க... - ஆய்வில் தகவல்;-))
   
"மயிராப்போச்சு போ" என்ற மனநிலைக்கு வந்தவுடன் பிரச்சனையை அணுகுவது சுலபமாயிருக்கிறது.
   
பொண்ணுங்களாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு.com ஆரம்பிச்ச மாதிரி, வாங்க வயசுப்பசங்க நாமலாம் சேர்ந்து கூலிங்பீரு .com ஆரம்பிப்போம்
   
மச்சான் பேரு மதுர. நின்னு பாரு எதிர. நான் கப்பம் கட்டி பட்டம் வாங்கி இன்ட்டர்நெட்டில் தினம் ட்ரெண்ட் ஆகும் பொய்க்கால் குதிர.
   
பில்டிங் இடிஞ்சு 60 பேரு காலினா சட்ட திருத்தம் தேவையில்லை.வேட்டியோட பாருக்குள்ள போய் குடிக்க முடியலைனா உடனே சட்டதிருத்தம்.வெளங்கிரும்
   
குழந்தைகளை சந்தோஷமாக குளிக்க வைக்கும் கலை, ஒருசில பெண்களுக்கே தெரிந்திருக்கிறது! # மத்த லேடீசுக்கு பத்து பாத்திரம் மாதிரித்தான். கதறக் கதற..
   
என் கவலையெல்லாம் என் பிரார்த்தனைகளின் போது கடவுள் ஹெட்செட் அணியாமல் இருக்கவேண்டும் என்பது தான்:-)))
   
பொண்ணுக்கிட்ட லவ் லெட்டர் கிடைச்சா,அது தனியா 1000 தடவ படிக்கும்,பையனுக்கு கிடைச்சா பக்கத்துல இருக்கிறவன்ட 1000 தடவ படிச்சு காட்டுவான்
   
மன்னிக்க பழகிக்கொண்டுவிட்டேன்.. இனி துரோகிகளை சம்பாதிக்கவேண்டும்!!
   
மக்களே, எங்க சமையல் ,எங்க போடோஸ்..இந்த சைட்டிற்கு ரொம்பவே மெனக்கிட்டு இருக்கோம்.ஆதரவு குடுங்க #கூட்டாஞ்சோறு #koottansoru.com
   
KFC எதிர்ப்பாளர்களே.. இப்ப என்ன செய்யலாம்?? http://pbs.twimg.com/media/BslpXXqCcAAp4tB.jpg
   
சுவாரஸ்யமே இல்லாத உரையாடல்கள், எண்ணிக்கையில் குறையும் அலைபேசி அழைப்புகள்....... பிரிவின் அறிகுறிகள் தெரியும்போதே விலகுதல் நல்லது !!
   
மின்வெட்டு வேறு மின் தடை வேறு - மின்சாரத்துறை அமைச்சர் # ஆமா அது சங்கிமங்கி, இது அவங்க அண்ணன் மங்கிசங்கி
   
கல்விக்கு கண் திறந்தார் காமராசர்.. கல்விக்கு கல்லா திறந்தனர் இன்றைய கல்வி வள்ளல்கள்.
   

0 comments:

Post a Comment