22-ஜூலை-2014 கீச்சுகள்




இந்த ஜாதியில் மணமகன்/மகள் தேவையென விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில் அதே ஜாதியில் இரத்தம்தேவை என விளம்பரம் தர தைரியமிருப்பதில்லை
   
#நண்பேன்டா | தம் மேரே தம்:) -- சிவாஜி - நம்பியார் http://pbs.twimg.com/media/BtC3govIAAAjmkd.jpg
   
யோவ்....12 ல ஒன்னு குறையுது எங்கயா? வித்துட்டிங்களா? http://pbs.twimg.com/media/BtDGKUgCAAAYw30.jpg
   
சாப்பாட்டறையில் தாயின் நினைவும்,படுக்கையறையில் காதலியின் நினைவும் வராத வாழ்க்கை வாழ்கிற ஆண் மட்டுமே நிறைவான மணவாழ்க்கை வாழ்கிறான்
   
தல தலை காட்டாமலே அவர் பெயர் உச்சரிக்கும் போதெல்லாம் கரகோஷம்அடங்கவேநேரமாகுது சூப்பர்ஸ்டார்க்கு அப்புறம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டவன்#தலடா
   
துபாய் பேக்டரியில் ஹெல்பர் வேலை. தகுதி +2 சம்பளம் 15000 ரூபாய் டிக்கட்,விசா,தங்குமிடம் இலவசம். RT pl. தெரிந்த ஏழைகளுக்கு உதவுங்கள்.
   
மதுரைக்கு வந்து முத்துபாண்டி மூஞ்சிலயே சாணி அடிச்சிட்டு போயிருக்கனா அவன் சாதாரண ஆளு இல்ல #இசாந்துடா
   
இவர்கள்தான் பாலஸ்தீனத்தின் ராணுவம். #மனதைரியம் மட்டுமே ஆயுதமாய்... http://pbs.twimg.com/media/BtEBpkDIgAArL1T.jpg
   
பத்தாப்பு படிக்கிறப்ப டவுசர் போட சங்கடப்பட்ட பசங்க தான் வளர்ந்ததும் ஷார்ட்ஸ் போட்டு சுத்துறானுங்க..
   
குழந்தையை எத்தனை முறை தூக்கியிருந்தாலும், அதன் உடையை மடிக்கும் நேரத்தில் அந்த சின்னஞ்சிறிய ஜீவன் மீது தனி பேரன்பு சுரக்கிறது
   
சாம்பார் சாதத்துக்கு எதுக்கு சாம்பாரும் சட்னியும் யோசிக்கிறப்பவே பின்னாடிருந்து 'பொங்கல் எப்டிங்க இருக்கு'ன்றா.. #நல்லவேள சொன்னடி
   
விஜய் சேதுபதி படத்துல மட்டும் இல்ல நிஜத்திலும் கொஞ்சம் வித்தியாசம் தான் போல..#தலைக்கு அப்புறம் நீதான் தல.!
   
இன்று பார்த்ததில் பிடித்தது! http://pbs.twimg.com/media/BtEWC2WCcAAvVkU.jpg
   
சில நிகழ்ச்சிகளுக்கு டிரெஸ் கோட் இருக்கும். நம்ம நீயாநானா கோபிக்கு ட்ரெஸ்ஸே கோட்தான்
   
தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும். கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .
   
10வருஷம் முன்னால ஒரு வடை 1ரூபா, ஒரு கால் பண்ண 10ரூபா, இன்னிக்கு ஒரு வடை 10ரூபா, ஒரு கால் பண்ண ஒரு ரூபா # வட...போச்சே..
   
குடையை ஏன் மறந்தாய் என ஒவ்வொரு துளியிலும் தலையில் குட்டுகிறது மழை...
   
ஓர் உச்சப்பட்ச தனிமையை உணர, ஒரு சிறு நிராகரிப்பே போதுமானதாய் இருக்கிறது.....
   
நைட்டு கொடில பாப்பா துணி மட்டும் காய்ஞ்சா,அதுக்குப் பயமா இருக்கும்னு,தன்னோட துணியையும் நனைச்சு அதேகொடில காயவைச்சுட்டுத் தூங்குறவதான் அம்மா
   
முடிவு தோல்வியாக இருந்தாலும் முயற்சி பாராட்டுக்குரியதாய் இருக்க வேண்டும் !
   

0 comments:

Post a Comment