1-மார்ச்-2014 கீச்சுகள்




கையில் பணம் இல்லாத நேரத்தில் எடுக்கும் பசி, அவ்வளவு எளிதாய் வாழ்க்கையை புரிய வைத்துவிடுகிறது....
   
நாம்தமிழர் கட்சிஆள் கல்யாணபோஸ்டரில் 'வீழ்ந்திடாத வீரம், மண்டியிடாத மானம்'. தம்பி, உங்களுக்குக் கல்யாணம்னா என்னன்னே தெரியலை.
   
இன்று உயிர் இல்லா ராஜீவ் சிலைக்கே பாதுகாப்பு கேக்குறாங்க காங்கிரஸ், அன்று நாங்க கேட்டது லட்சகனக்கான தமிழர்களின் பாதுகாப்பு :(
   
நண்பனை 'மச்சான்' என்று கூப்பிட்டு, அவன் தங்கையை நாமும் 'தங்கை' என்று அழைக்கும் ஒர் உறவுமுறையை தாய் சொல்லித் தரவில்லை, நட்பு சொல்லித் தந்தது!
   
சூடா குடிக்குற டீக்கு கைப்பிடி இல்லாத க்ளாஸ். கூலா குடிக்கிற ஜுஸ்க்கு கைப்பிடியோட க்ளாஸ் இதான் வாழ்க்கை.
   
பிரச்சனைகளுக்கு தீர்வாக கடவுளை தேடி அலையும் அவஸ்தையெல்லாம் பெண்களுக்கு தான், ஆணிற்கு ஒரு பெண்ணின் ஆறுதலே போதுமானதாய் இருக்கிறது....
   
ரத்தம் சிந்த கூட தயாராய் இருக்கிறார்! வியர்வை சிந்த முடியாது என்கிறார்! # வீதிகளில் சாட்டையடிக்கும் பிச்சைக்காரர்
   
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம் - அஜித்த தவிர வேற யார்க்கும் இந்த லைன் செட்டாயிருக்காது.
   
வாழ்வில் நிறுத்தமுடியாத கண்ணீருடன் ஓர் இரவைக் கடக்காதவன் எவனுமில்லை.
   
"என்ன செய்து கொண்டிருப்பாய்" என யோசிக்கும்போதெல்லாம் "என்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாய்" என எண்ண வைப்பது காதல்.
   
என்ன குழந்தை?எந்த ஸ்கூல்?எத்தன அரியர்?என்ன சம்பளம்? எப்போ கல்யாணம்?எத்தன குழந்தைங்க?உடம்புக்கு என்ன ? செத்துட்டாரா?-"வாழ்க்கை"
   
ஒரு கையை முட்டுக்கொடுத்து,மறு கையைச் சூப்புகிறாள் மகள்.தன்னைத்தான் கும்பிடுகிறாளென எண்ணி,வரங்களைத் தந்துவிடுகிறது ஏமாந்த சாமி:)#மகளதிகாரம்
   
தாலியை தங்கத்தில் செய்ததிலிருக்கிறது ஆணின் சாதுர்யம்!
   
வீட்டைக் கூடாக்கி விடுகிறார்கள் கோவைக்காரர்கள். #எங்கூட்டுக்கு வாங்க..!
   
LOL RT@dagalti நாம்தமிழர் கட்சிஆள் கல்யாணபோஸ்டரில் 'வீழ்ந்திடாத வீரம், மண்டியிடாத மானம்'. தம்பி, உங்களுக்குக் கல்யாணம்னா என்னன்னே தெரியலை.
   
தொப்பை வந்த புதுசுல ஒரே ஒரு எக்சசைஸ் மட்டும் எல்லாரும் சரியா பண்றாங்கே... பொண்ணுங்கள பார்த்தா மட்டும் வயித்த உள்ள இழுத்து நடக்குறது!
   
கல்வி கற்றலும்,கற்று கொடுத்தாலும் எவ்வளவு கடினமானவிஷயம். பாராட்டுவோம் ஏழை மாணவர்களையும் அர்ப்பணிப்பு ஆசிரியர்களையும். http://t.co/PSWDbD4m8Y
   
டச் ஃபோனை வாங்கிக் கொடுத்துட்டு கட்டை விரலைக் கேட்ட கதையா இருக்கேப்பா வாழ்க்கை.!
   
எல்லோரும் என் பிரச்சனைகளுக்கு தீர்வை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், நான் என் பிரச்சனை எதுவென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்....
   
எல்லாம் பெற்று விட்டோம் என்கிற நினைப்பும்,எதையோ இழந்து விட்டோமோ எனும் தவிப்பும் கொண்டதே அயல்நாட்டு வாழ்க்கை!
   

0 comments:

Post a Comment