26-பிப்ரவரி-2014 கீச்சுகள்




பத்து வயசுல கல்யாணம் கட்டி 12 குட்டி பெத்த சமூகம் 30 வயசுல கூட கல்யாணமாகம உழைக்குற ஐடி பசங்களை பாத்து சொல்லுது கலாச்சார சீர்கேடாம்
   
குழந்தைத்தனத்துக்கும் கேணத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு என்பது பல பெண்களுக்குப் புரிவதில்லை.
   
அட போங்க தலைவரே....லிப்ஸ்டிக் போட்ட குழந்தைய கேட்டுப் பாருங்க..."நாம்" ன்னு சொல்லும் போது கூட உதடு ஒட்டாது:)
   
சிறுத்தையின் அன்பான வேண்டுகோள்."ஹெல்மட்" போட்டுகிட்டு வண்டி ஓட்டுங்கப்பா.#ஹெல்மட் இருக்கவே என் தல தப்பிச்சது. http://t.co/sEgHPS9K9D
   
RT @manipmp பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணகடன், நாற்பது வயசில் வீட்டுகடன், ஐம்பது வயசுக்கு பெத்தகடன் #ஆணின் வாழ்க்கை
   
எதையுமே எளிமையான பார்வையோடு பார்க்க முடியாமல் போவதே, சில அறிவாளிகளின் ஆக சிறந்த பலவீனம் !!
   
வயிறு சுருங்க ஊதி வாய் வலிக்க பலூனில் காற்றை நிரப்புகிறேன் . என் வயிறு நிரம்புவதற்காக http://t.co/qHhxh20jQ5
   
பாஜக கூட்டணி அமைந்தால் கேப்டனின் காலர் ட்யூன் 'தாமரப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்லை' ... விவிசி @luckykrishna :))
   
ரசிக்கிறான் என்றதும் நம் பெண்கள் போல் பெருமை பீத்திக்கொள்ளாமல் நன்றி என்பதாக புன்னகையை பரிசாக தரும் ஒவ்வொரு வெள்ளைக்காரியும் சாமிதான் :-)
   
தயவுசெஞ்சி தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க ஆண்களே .உங்களால ஒண்ணும் தெரியாத பொண்ணுகளும்,சுத்தி இருக்கவங்களும் பாதிக்கப்படுறாங்க. _/\_
   
கோபால் கோட்சே, காந்தி கொலையினை திட்டமிட்டவர் 16 வருடங்களில் விடுதலை. நல்லா இருக்குடா உங்க நீதி
   
வேட்பாளர் அறிவிப்பு,எங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கல்ல-தா.பா#இதுக்கு முன்னாடி இருந்த சர்கிள் இன்ஸ்பெக்டர் பாத்ரூமையே கழுவ சொன்னாரு
   
முப்பதுகளில் தன் பெற்றோர்களை மனைவியின் முன் விட்டுக்கொடுக்காத அதே ஆண்தான் அறுபதுகளில் தன் மனைவியை பிள்ளைகள் முன் விட்டுக்கொடுப்பதில்லை!
   
: மற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் பாத்துருபிங்க,ஆனா வெறியர்களே ரசிகர்களா இருந்து பாத்ருப்பிங்க? அதான் நாங்க. :) #Thalada http://t.co/3ohxNmQgqG
   
நல்லா பழகிட்டு இருந்த ஒருத்தர்ட்ட கொஞ்சகாலம் பேசாம இருந்துட்டு மறுபடியும் பேச ஆரம்பிக்கும்போது பழைய அன்னோன்யம் போய்டுது .!
   
யோசிக்காமல் சொல்ல முடிகிற பதில்களில் ஒன்று "யோசித்து சொல்கிறேன்" என்பது:)
   
மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் போதும்; மனச்சிக்கலுக்கு வாழ பழக வேணும்!
   
வெளியூர் போயிட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு இருக்கானு தேடுவோம் இப்போலாம் சார்ஜர் எங்க இருக்குனு தேடுறோம் ஆண்ட்ராயிட் அட்டூழியங்கள்
   
RT @vivika_suresh பலருக்கு பகலில் தெருவிளக்கு எரியும்போது வராத அக்கறை ஸ்கூட்டியில் லைட் எறியும்போது மட்டும் வந்துவிடுகிறது! #அரே ஓ சம்பா...
   
தன்னைக் கண்டு மட்டுமே வெட்கப்பட்டவளாகவும் , தன்னிடம் மட்டுமே வெட்கங்கெட்டவளாகவும் இருக்கும் பெண்தான் ஆணின் உச்சபட்ச எதிர்பார்ப்பு/பேராசை
   

0 comments:

Post a Comment