13-பிப்ரவரி-2014 கீச்சுகள்




முரளி விஜய்யை டெல்லி வாங்கிடானுங்க... அப்டியே நடிகர் விஜய்யையும் கூட்டிட்டு போய்ட்டா தமிழ்நாடு தப்பிச்சிக்கும்
   
என் பக்கத்துல தூங்கிட்டிருக்குறவர் கனவுல யாரோ How does an induction motor run?ன்னு கேட்டுட்டாங்க போல.
   
ஜனகராஜ் : முரளி விஜய், மோர்கல் போயாச்சு பாட்சா : போகட்டும் ஜன : ஹஸ்சி போயாச்சு பாட்சா : போகட்டும் போடா, அந்த தோனியே CSK பக்கம்
   
வீரர்களை ஏலத்துக்கு எடுக்கும் அணிகளுக்கு மத்தியில் வருஷா வருஷம் பைனலையே ஏலத்துக்கு எடுக்கும் அணி தான் சி.எஸ்.கே
   
முரளி விஜய டெல்லி அஞ்சு கோடிக்கு எடுக்கல, சென்னை தான் டெல்லி கைல 5 கோடி கொடுத்து அந்தாள வச்சுக்க சொல்லிடுச்சு # CSKடா
   
அக்வா ஃபீனா வாட்டர் குடுக்குறாங்கன்னு கை தூக்குனத தப்பா புரிஞ்சிகிட்டு ஆசிஸ் நெக்ராவ தலைல கட்டிடானுங்க சீனி சார்.#பிளமிங் STD கால் கதறல்
   
விரும்பி ஏற்கும் தனிமை சொர்க்கத்தை விட மேலானது. தள்ளப்படும் தனிமை நரகத்தை விடவும் மோசமானது.
   
மும்பை அணி செம்ம பலம் போலிருக்கே. இருக்கட்டும் இருக்கட்டும். நீ பொழப்புக்கு ரவுடி. நாங்க (CSK) பொறப்புலயே ரவுடி.
   
மத்த டீம்ல விளையாடுற வரை தான் அவன் ஆஷிஷ் நெஹ்ரா, எப்போ சென்னை வந்தானோ அப்பவே ஆஷிஷ் நெருப்புடா # சிஎஸ்கேடா
   
யானை என்ற வார்த்தையில் 'னை' யே யானையின் உருவத்தை ஒத்திருப்பது அழகு
   
11 சீட்டுமே ஜோக்கரா இருந்தா எப்படி மாப்ள டிக் அடிக்கிறது # சென்னை டீம் புது ப்ளேயர்ஸ்
   
அதிர்ஷ்டக்கல் விக்கறவங்க கிட்டே ஒரே ஒரு கேள்வி.அதை ஏன் வித்து காசாக்கறீங்க? நீங்களே வெச்சிருந்தா அதிர்ஷ்டம் தானே?
   
திறமைசாலிகள் ஏழையாக இருப்பது அவர்கள் பலவீனம் .வாய்ப்புக்காக தங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது அவர்கள் பலம்
   
க்ளாஸ் டாப்பர்கள் புத்தகத்தை படிக்கிறார்கள்,ஆவரேஜ் ஸ்டுடண்ட்கள் வாழ்க்கையை படிக்கிறார்கள்#தோணுச்சு
   
இதே விஜய் டிவியா இருந்தா ப்ளேயருகளயும் ஏலக்கூடத்துக்கு இட்டாந்து நல்ல வெல போகாட்டி அழுவ உட்டு க்ளோஸ் அப் வெச்சிருப்பானுகல்ல!~
   
ஒரு ஆண் தன் காதலியை அழகியென நினைத்துக்கொள்ள அவளுக்கு அதிக தகுதிகள் தேவையில்லை. காதலி என்ற தகுதியே போதும் !
   
உயிர் வாழ ஒர் உயிர் போதும்...உயிர்ப்போடு வாழ இன்னுமோர் உயிர் வேண்டும்!
   
நீங்களாம் நல்ல நல்ல ப்ளேயர பெரிய விலைக்கு வாங்குறீங்க, நாங்க மொத்தமா அம்பயர விலைக்கு வாங்கிடுவோம், போங்கடா # CSKda
   
வாழ்வை சுவாரசியமாக்கும் ஏதோவொரு காரணத்தை அவ்வப்போது தந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.
   
' வீடு வாங்கிருக்கேன்' 'காரு வாங்கிருக்கேன்'னு சொல்றாங்க, ஆக்சுவலி நீங்கலெல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா !
   

0 comments:

Post a Comment