13-செப்டம்பர்-2015 கீச்சுகள்




மீளவே முடியாது என்று நினைத்திருந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது சிறு புன்னகையாய் மட்டுதே நினைவில் இருக்கிறது, காலத்தின் வலிமை அபாரமானது...
   
தலைகனம் அதிகம் என்பதால் தான் தீக்குச்சிகள் எரிந்துபோகிறது
   
சேனல்கள் மாற்றும் சமயத்திலும் ஒரு நொடி கூட பார்க்கத் தரம் இல்லாத நிகழ்ச்சி மானாட மயிலாட!
   
மெல்ல ஆடை விலக்கினேன்... ஆ என்று கத்தவில்லை... மே... என்று கத்திக் கொண்டு சென்றது 🐏😀
   
மூத்த மகளின் ஆறாவது மற்றும் இளைய மகளின் நான்கரையாவது பிறந்தநாளையொட்டி திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில்.. http://pbs.twimg.com/media/COqy3ACWcAAfyGg.jpg
   
தூர்தர்சனில் திடீரெனஒருநாள் சக்திமான் மொழிமாற்றம் செய்யபடாமல்இந்தியிலே ஒளிபரப்பாகும்கொடுமையை அனுபவித்தவர்களுக்கே இந்திதிணிப்பின் வலிபுரியும்
   
நமக்குத்தான் கோயில்,மசூதி,தேவாலயம்... புறாக்களுக்குப் பாதுகாப்பான பொந்து..அம்புடுத்தேன்
   
அடம்புடிச்சி முஸ்லிம் தெருவுக்குள்ள கொண்டுபோற புள்ளையார சேரிக்குள்ள கொண்டு போக மாட்டானுங்க..
   
என் தோல்வியின்போது துக்கம் விசாரிப்பவன் என் வெற்றிகளின்போது ஒரு வாழ்த்தும் சொல்லவில்லை... பாவம்,என் வெற்றி அவனுக்கு துக்கமாயிருந்திருக்கும்!
   
முட்டாளாக வாழ பழகிக்கொண்டால் உன் சிறுபுத்திசாலித்தனமும் வரவேற்கப்படும்
   
பி.ஆர்.பி நரபலி விவகாரத்தில் ஆய்வு செய்யப்பட்ட இடத்திலேயே அமர்ந்து, போராட்டத்தை துவங்கியிருக்கிறார் #சகாயம்! http://pbs.twimg.com/media/COtmIseUwAAE1k-.jpg
   
மரணவலியில் கூட தூரோகி முன்னாடி மட்டும் அழகூடாது ஏன்னா அவனுக்கு தேவையே அதுதான்
   
இணையத்தில் எனக்கு பிடித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று.. http://pbs.twimg.com/media/COr5TmyUsAATNdi.jpg
   
ஊருக்கு ஊர் ஐந்து கோயில்கள்,நான்கு செல்போன் டவர்கள்,மூன்று கான்வெண்ட்கள்,இரண்டு டாஸ்மாக்குகள் இருக்கின்றன... ஒரு பொதுக்கழிப்பிடம்கூட இல்லை!
   
திருமணம் முடிந்த கையோடு மரக்கன்று நடும் ஜோடி ஆல் போல தழைத்து அருகு போல வேருன்றி வாழ வாழ்த்துகிறோம் #வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/COtqBAAWcAEM51g.jpg
   
நில்✋படி 👇செல்👋 யானைக்கு 🐘 வேறு தமிழ்ப்பெயர்கள் அறுபடை அரசுவா இபம் களிறு வேழம் உம்பர் பெருமா வாரணம் போதகம் தும்பு குஞ்சரம். #அறிவோம் தமிழா
   
மழை பெய்தால்..... கிராமங்கள் மணக்கும் நகரங்கள் நாறும் http://pbs.twimg.com/media/COs3BlVUYAA_nsK.jpg
   
நல்ல மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம் அல்ல,, அவள் பெற்றோர் வளர்த்த விதம்....
   
ஆறுதல் சொல்பவரின் அறிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை..அன்பு மட்டுமே..
   
தப்பே செய்யாத ஆண்களை விட, தப்பு செஞ்சிட்டு, அத ஒத்துகிட்டு கொஞ்சி,கெஞ்சி சமாளிக்குற ஆண்களையே பெண்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!
   

0 comments:

Post a Comment