31-ஜூலை-2015 கீச்சுகள்
டாக்டர் கலாம் என்ற விந்தை மனிதர் பற்றிய சில எண்ணங்களை எழத்துக்களாக வடித்துள்ளேன் http://m.dailythanthi.com/MDTDetailpage/Detailpage?parentsectionid=2&articleid=6C5FE1A0-451E-40C4-A1E1-F1ECE45CF5A7
   
நாமதான் நாகரீகம்ன்னு நினைச்சு எல்லாத்தையும் வெளில காட்டிக்காம இருக்கோம் விஜயகாந்த்க்கு கோவமோ ,அழுகையோ குழந்தை மாதிரி ஆயிடுறார் !proud
   
அப்துல்கலாம் அஞ்சலி விவகாரத்தில் தன் மதிப்பை உயர்த்திக்கொண்ட தலைவர் விஜய்காந்த்.தாழ்த்திக்கொண்ட.தலைவர்கள் ஜெ ,கலைஞர்
   
இப்போதாவது புரியுமா. பணமோ, அழகோ, சாதியோ, மதமோ எதுவுமில்லை. வாழ்ந்த விதம் மட்டுமே ஒருவருக்கு பெருமை சேர்க்கும்.
   
எப்படிப்பட்ட நேர்மையாளர் கலாம் 👏 http://pbs.twimg.com/media/CLIdWIlUEAMUb0z.jpg
   
தில்லியில் மரியாதை செலுத்தியாகிவிட்டதென்று விடாமல்...நல்லடக்க நிகழ்வுக்கும் வரும் பிரதமரின் பண்பு பாரட்டுதற்குரியது..
   
மதம் என்பது மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே என்பதை உணரவைத்த இன்னொரு கடவுள். http://pbs.twimg.com/media/CLJfzmHVAAABhDM.jpg
   
ஒரு மனுஷனுக்கு இதைவிட வேற என்ன மரியாதையானஇறுதி மரியாதை குடுக்க முடியும்..? # #அப்துல்கலாம் http://pbs.twimg.com/media/CLIjJyPVEAAYeL2.jpg
   
எங்க வீட்டில் கலாம் சார்க்கு அஞ்சலி ://// http://pbs.twimg.com/media/CLIVlT1UwAAL0mV.jpg
   
ஒரு மரணத்தில் கண்டுக்கொள்ளப்பட்ட மனிதன் விஜயகாந்த்
   
எந்த அரசியல்கட்சியையும் சாராத ஒருவருக்கு மக்களே ப்ளெக்ஸ் வச்சி, போஸ்டர் அடிச்சி அஞ்சலி செலுத்தியது கலாமுக்கு மட்டும்தான்னு நினைக்கறேன்
   
#எம்ஜிஆர் #அண்ணா #காமராசர் #பெரியார் #பிராபாகரன் #தெரெசா #கலாம் லாம் இறக்காமல் இருந்திருக்கலாம். #ராஜபக்சே பிறக்காமலே இருந்திருக்கலாம்..
   
அப்துல் கலாம் உடல் விதைக்கப்பட்ட இடம். இனி ராமேஸ்வரம் போனா கோவில்லுக்கு போறோமோ இல்லையோ இங்க போகணும் கண்டிப்பா http://pbs.twimg.com/media/CLKE1vsVEAAP_5P.jpg
   
கோடி பணம் சம்பாதிப்பது எளிது ஒரு குழந்தையின் மனதை சம்பாதிப்பதுதான் கடினம் http://pbs.twimg.com/media/CLGquNhUwAAjkPf.jpg
   
தமிழகத்தில் இருந்து கொண்டே ஜெயாலலிதா,கருணாநிதி இருவரும் கலந்து கொள்ளாமல் அப்துல்கலாமின் இறுதி ஊர்வலத்திற்கு அதிக புனிதத்தை சேர்த்து விட்டனர்
   
யாகூப் முஸ்லிம் என்பதால் தான் இந்தியாவில் இப்படி கொல்லப்பட்டான்னு பாகிஸ்தான் சொல்றானுங்க,கலாமுக்கு இந்தியர்கள் குடுக்கும் மரியாதைய பாருங்கடா
   
கலாம் அவர்களை அடக்கம் செய்யும் காட்சியை TV யில் பார்த்து கொண்டிருந்த என்னை எழுந்து நிற்க சொன்ன என் மகனிடம் தெரிகிறது அவர் தாக்கம் #KalamSir
   
கலாம் மறைவு: நாடே துக்கத்தில் மூழ்கியிருக்க "பர்த் டே பார்ட்டி" கொண்டாடிய தனுஷ் # இதுதான் சினிமாக்காரங்க நாகரீகம்
   
"வாழ்ந்தா இவரை போல வாழணும்" என பலரை பார்த்து பொறாமை பட்டதுண்டு! "செத்தா இவரை போல சாகணும்" என பொறாமை பட்ட தினம் இன்று ஒன்றே! #கலாம்
   
ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத அப்துல் கலாம் !! ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் #Share செய்யவும் http://pbs.twimg.com/media/CLJ0JJaUYAE47kL.jpg
   

0 comments:

Post a Comment