14-ஜூலை-2015 கீச்சுகள்




பணமில்லா இளமையும் துணையில்லா முதுமையும் #விஷமே
   
ஏசு சாமி, அல்லா சாமி,பெருமாள் சாமி ய விட ஆமா சாமி தான் கேட்ட வரத்த உடனே தருது..
   
வெளியே திருவோடு... உள்ளே அர்ச்சனைதட்டு... இடையில் உண்டியல்... கொஞ்சம் குழப்பமாயிருக்கிறது!
   
சுதந்திரம் பெற்றால் உங்களால் ஒரு குண்டூசி கூட சொந்தமாக தாயரிக்க முடியாது என்ற இங்லாந்தின் செயற்கை கோளை இந்தியா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது .
   
வெதுவெதுப்பாய் .. கதகதப்பாய்.. உட்கார்ந்த இடத்திலேயே உணவுகிடைக்கும் உலகிற்சிறந்த உயர்தர உணவகம்! http://pbs.twimg.com/media/CJzepmyUAAAOQdO.jpg
   
காயங்களுக்கு மருந்தே போதும் சர்ஜரி அவசியமில்லை சிறு சண்டைகளுக்கு மனம் விட்டு பேசினால் போதும் பிரிவு அவசியமில்லை
   
நம்மைப் பார்த்து ஒருவர் முகத்தை திருப்பிக் கொள்கிறார் என்றால் அது நாம் பாஸ்வேர்ட் டைப் பண்ணும் போது மட்டுமாகத் தானிருக்க வேண்டும்:))
   
வயிறு நிரம்பியது.!! வறுமையிலும்.. அவள் கர்ப்பம்..!!
   
அவமானம் உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவுவதில்லை. #புதுமொழி
   
தனியாகவே அழுது கொள்ளுங்கள், ஆறுதல் எதிர்பார்த்தால் அவமானம்தான் மிஞ்சும்!
   
அனைவரையும் ஊட்டி வளர்த்த என் இனம் இன்று ஊற்றி வளர்க்கப்படுகிறது. http://pbs.twimg.com/media/CJuJBS-VEAIDyyy.jpg
   
என் அன்பு மிக மிக எளிமையானது, அதை எவ்வித கருணையுமின்றி நிராகரிக்கும் நீங்கள் என் கடவுள்....
   
கே:"கடவுளுக்கு என்ன தெரியும்?' ப:"எல்லாம் தெரியும்!" கே:"தமிழ் தெரியுமா?" ப:"ம்ம்!" கே:"பின்னஏன் சமஸ்கிருதத்துல மந்திரம் ஓதுறாங்க?" ப:?
   
மனதை உறுத்தும் ஒரு கேள்வியைக் கேட்கத் துடிக்கிறது உதடு..அது ஒரு புரிதலுக்கான ஆரம்பமாக இருக்கலாம் அல்லது ஒரு நிரந்தர பிரிவின் தொடக்கமாகக்கூட
   
"ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிகள் மட்டுமே இன்னும் சொந்த காலிலே நிற்கிறார்கள் #தன்னம்பிக்கை http://pbs.twimg.com/media/CJrvHXpUkAAysqU.jpg
   
இங்க்லீஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில வேலை வாங்குறது பெருசில்ல. தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலைவாங்குற அவன் தான் பெரியாளு.
   
ஒருவருடைய டுவீட்டை பிடித்திருந்தால் ஆர்டி பண்ணாமல் அவருக்கு தெரியாமல் காப்பி பண்ணிப்பது அவர் எடுத்த வாந்தியை திண்பது போல அல்லவா ??!!
   
ஒரு பெண்ணின்அழகை பார்த்தவர்கள் நேசிக்கிறார்கள்.கோபத்தை பார்த்தவர்கள் பிரிகிறார்கள். கோபத்திலுள்ள அழகை பார்த்தவர்கள் சேர்ந்து வாழுகிறார்கள்.
   
நரகத்திற்கு செல்வதை பற்றி கவலையில்லை ; அதற்கான பயிற்சியை இந்த உலகம் ஏற்கனவே வழங்கி விட்டது !!!
   
ஆசையை விட்டொழிக்க புத்தனாக பிறக்கவேண்டாம் ஏழையாக பிறந்தாலே போதும் http://pbs.twimg.com/media/CJzfs_5UYAAMfqQ.jpg
   

0 comments:

Post a Comment