27-ஜூலை-2015 கீச்சுகள்
யாகூப்பை தூக்கிலிடாதீர்கள் - சல்மான்~!! சரி ரோட்டோரத்துல படுக்க சொல்லுவோம் நீங்க காரு ஓட்டிக்கிட்டு வாங்க~!!
   
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா 20 தமிழர்களை சுட்டுக் கொண்ண ஆந்திராக்காரனை பழிவாங்கதான் ஜில்லாவ ஆந்திரால ரிலீஸ் பண்ணிருக்காங்கனு அண்ணா தெய்வம்டா
   
இன்று பாகுபலி அன்றே MSபாஸ்கர் அசத்தியதை மறந்துவிட்டோம் http://pbs.twimg.com/media/CKz8oh0UcAAy5xD.jpg
   
கார்கிலில் இந்தியா வெற்றியடைந்த 16-வது ஆண்டு தினம்....நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை இந்நாளில் வணங்குவோம் 🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CKz8Jt2UMAEUg0T.jpg
   
உலகில் நான் மிகவும் ஆச்சர்யத்தோடு பார்க்கும் நபர்கள், படுத்தவுடன் உறங்கிவிடுபவர்கள் தான்.
   
அன்பும் ஒரு பிச்சைதான். போட்டுட்டு போயிடனும். திருப்பி ஏன் கொடுக்கலன்னு வாக்குவாதம் செஞ்சுட்டு இருந்தா நமக்குதா அசிங்கம்.
   
நாற்று நட நாதியில்லை நான்குவழி சாலைஎதற்கு? நேற்றிருந்த வயல்கள் இல்லை நிலவுக்கு ராக்கெட் எதற்கு? வயிற்நிரப்ப வழி இல்லை வல்லரசு பட்டமெதற்கு?
   
'செய் அல்லது செத்துமடி' என்றது கடந்த காலம்.!! 'செத்து மடியுமுன் செய்துமுடி' என்கிறது நிகழ்காலம்..!!
   
இழப்பென்பது எல்லா உயிர்களுக்கும் வலி நிறைந்ததே. மிகைப்படுத்துதல் ஒன்றே மனிதருக்குச் சொந்தம். http://pbs.twimg.com/media/CK2Mzi_UsAAYLHD.jpg
   
#VaaluOnAugust14 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச அதே மாசத்துல வாலு'க்கு சுதந்திரம் கிடைக்கப்போகுது
   
சேலத்தில் பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமானு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டன் முறைக்கிறார்.
   
என் காதல் நில என்று வாசல் வரும் அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும் என் அன்பே,,,,,,,! என் அன்பே,,,,,,,,,! http://pbs.twimg.com/media/CKz1z4CUsAAcJNi.jpg
   
கோதுமைய ஒரு பிடி வாய்ல அள்ளிப்போட்டு மென்னே பபுள்கம் மாதிரி ஆக்கறதெல்லாம் ஒரு கலை
   
இளம் பெண் பெயரில் ஆபாச பேஸ்புக் கணக்கு , முன்னாள் காதலன் கைது // இவனுங்களெல்லாம் தேடி போய் காதலிங்க, நல்ல பசங்கள ரிஜக்ட் பண்ணிடுங்க !!
   
உன் நினைவை கொண்டு வராத ஏதேனும் ஒன்று உள்ளதா என தேடிக்கொண்டு இருப்பது தான் என் மீத வாழ்வின் சுவாரஸ்யம்.
   
என்னதான் சொல்லுங்கள் நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசிப்பதுதான் நாம் இவ்வுலகில் பெற்ற பெரும் பாக்கியம்.
   
பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுப்பிட்டு ட்விட்டர்ல மட்டும் தமிழுக்கு போராட்டம்??? #முதல்_மனிதன்_தமிழன்
   
எப்போதும் தயாராக இருங்கள் #வாய்ப்பு எந்த நேரத்திலும் வரக்கூடும். காலை வணக்கம் http://pbs.twimg.com/media/CKzopBTUsAIsDAM.jpg
   
யாரோ ஈரோட் மகேஷோட ஆழ்மனசுல போயி நீங்க நல்லாக் காமெடி பண்றீங்கனு நம்ப வெச்சுருக்காங்க. 😕
   
மரியாதை கிடைக்காத இடத்தை விட...அதீத மரியாதை கிடைக்கும் இடங்களில் கவனமாக இருக்கத்தோன்றுகிறது..
   

0 comments:

Post a Comment