25-ஜூலை-2015 கீச்சுகள்
மீந்திருக்கும் குழம்பு சட்டியில் சோறு போட்டு பிசைந்து, சட்டியின் விளிம்பில் கைகளை வழித்தெடுத்து நக்கும் போது தோன்றியது சொர்க்கம் தனியாயில்லை
   
அண்ணனின் சட்டைகளை போட்டுத்திரிந்த எனக்கு போட்டியாக, தாய்மாமன் வேஷ்டியில் தொட்டில் கட்டி உறங்குகிறாள் என் மகள்.
   
நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லிட்டு, போட்டதுக்கு பின்னாடி எவ்ளோ ஆச்சிங்ணானு கேக்குற புத்திசாலிதனம்லாம் ஸ்கூட்டிகளுக்கே உரியது...!!! 😊😊😊
   
எங்க இருந்து வரீங்க நீங்க எல்லாம் :P #FB http://pbs.twimg.com/media/CKqGSzJUsAERz3_.jpg
   
சிலரை காயபடுத்திட கூடாதுன்னு நாம ஒதுங்குவதை கூட நாம பயந்துட்டோம்னு தப்பா நினைப்பதுதான் உச்சகட்ட வேதனை...
   
பிச்சைக்கார கிழவி கேட்கும்போது இல்லாத சில்லறை, ஆடம்பர ஏசி ஹோட்டலில் டிப்ஸுக்கு இருந்து விடுகிறது நோட்டாய்...
   
ஒருவருக்கு செய்த உதவியை சொல்லி காட்டி கொண்டிருப்பவர்கள்! தங்கள் தரத்தை தானே குறைத்துக் கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.!!
   
சிவாஜி இரு வேடங்களில் நடித்த ஒன்ஸ்மோர் #தற்போது உங்கள் கே டிவியில்
   
சென்டரல் கவர்மென்டு மேல தானடா கோவம்..நாங்க என்னடா பண்ணோம்.. ஞாயித்து கெழம சுறாவாம்.. அடேய் சன்டிவிஈஈஈஈ...
   
முகம் பார்க்கும் கண்ணாடிக்கு தெரியும், ஆயிரம் உண்மைகள். அதே போலத்தான் ! சொல்ல முடியாத பல உண்மைகள் என் மனதில். - நான் ஒரு ஊமைக் கண்ணாடி
   
பிகர் இன்னைக்கு வரும் நாளைக்கு போயிடும் உண்மையான நட்பு மட்டும்தான் நம்ம செத்தாலும் சுடுக்காடு முடிய வரும்..👉 பிகர் பிகர்னு சாவாதிங்கடா...
   
மரணத்துடன் நாம் எவ்வளவுதான் கண்ணாமூச்சி ஆடினாலும் வெற்றி பெறப்போவது மரணம் தான்..!!
   
மழையிலேயே பேசிய ராகுல்.. -செய்தி # கடவுள் காரி துப்பிருக்காரு...
   
பசங்க எல்லாம் ஹீரோ தான் பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான் உங்க வாழ்க்கை சங்கர் படமா, பாலா படமா என்பதை மட்டும் நன்றாக அறிந்துகொள்ளவும்.☺
   
வாழ்க்கையின் வேர்களோமிக ரகசியமானது ரகசியம் காண்பதே நாம் அவசியமானது தேடல் என்னும் உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும் http://pbs.twimg.com/media/CKpiI8lUcAA7yuU.jpg
   
படிக்குறப்ப ஊர்சுத்துறப்ப அப்பா கிட்ட கஞ்சத்தனமா தெரிஞ்ச விஷயமெல்லாம் நாம வேலைக்கு போய் சொந்தமா சம்பாதிக்கும் போதுதான் சிக்கனம்னு புரியும்!
   
"விதி" படத்தை திரையில் பார்த்தவர்களை விட, ஒலிநாடாவில் கேட்டு ரசித்தவர்கள் அதிகம்.
   
எது வாழ்க்கை.? நாம் வாழ்ந்ததா.? வாழ்ந்து கொண்டிருப்பதா.? நாம் வாழப்போவதா.? எது வாழ்க்கை.? தெரிந்து கொள்ளுமுன்னே மரணம் வந்து நிற்க்கிறது.!!
   
நண்டு போக நாற்று, நரி போக எள்ளு, ஆளு போக துவரை, வண்டி போக வாழை, தேர் போக தென்னை. பயிருக்கு எவ்வளவு இடைவெளி விடவேண்டுமென முன்னோர் வகுத்தது!
   
நாம யாருக்கு வலிக்காம விலகனும்னு நினைக்கிறமோ அவங்க தான் நம்மள திரும்ப திரும்ப கட்டாயப்படுத்தி அதிகமா வலிக்க வச்சிக்கிறாங்க
   

0 comments:

Post a Comment