17-ஜூலை-2015 கீச்சுகள்
இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,,, என் குட்டி காமராஜர் பத்தி பேசி, வந்தேமாதரம் பாடி பரிசு வாங்கி இருக்கான் ஸ்கூல் ல :-)))),,,
   
உண்மையில் உறவுகளை தக்கவைத்து கொள்ளதான் "நடிக்க" வேண்டியுள்ளது விலக "உண்மையாய்" நடந்துகொண்டாலே போதுமானதாய் உள்ளது🚶🚶
   
காமராஜரை"நாடார்" என்கிறார்கள்.. ஆம் அவர் அநீதியை நாடார் ஊழலை நாடார் பழி வாங்குதலை நாடார் செல்வத்தை நாடார் சோம்பலை நாடார் சுகத்தை நாடார்
   
காமராஜர் ஆட்சியில் அனைவரையும் "படிக்க" வைத்தார்... இன்றைய ஆட்சியில் அனைவரையும் "குடிக்க" வைக்கிறார்கள்... #HBDKingMaker
   
வாழ்ந்து கெட்டவர்கள் உங்களிடம் இரந்து நிற்கும்போது ஏற்கனவே கூனிக்குறுகிதான் நிற்பார்கள்.இல்லை என மறுத்து மேலும் அவர்களை குறுக வைக்காதீர்
   
கழுதைக்கு பாடம் புகட்ட முடியாது..ஆனால் பாட புத்தகத்தையே புகட்டி விடலாம் 😂😂😂😂
   
மிக அவசரமாக "B+" இரத்தம் தேவை :- இடம் :- KMCH கோயம்புத்தூர், நாள் :- 17.07.2015 ( நாளை காலைக்குள்) தொடர்புக்கு : 9659551402
   
அதிகம் பகிர்ந்து இந்த குழந்தை கிடைக்க உதவுங்கள் http://pbs.twimg.com/media/CJ70DunUMAALsaF.jpg
   
காதலிக்கும் போது என்ன பேசறதுன்னு தெரியாததும், கல்யாணத்துக்கு பின் எப்படி பேசறதுன்னு தெரியாததும் தான் ஆண்களின் பிரச்சனையே :-/
   
வலைதளங்களில் பெண்களிடம் ஆபாசமாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 3251 பெண்களின் கையொப்பம் பெற்று இராமநாதபும் எஸ்பியிடம் மனு வழங்ப்பட்டது
   
ப்ரண்ட் ஒருத்தன ஒரு பொண்ணு நீ பாரீன் போனா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இவன் பாரீன் போன நேரத்துல வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருச்சு 😂
   
எங்கு நாம் காமராஜரை மறந்து விடுவோமோ என்ற பதற்றத்தில் அவருக்கு நேரெதிராக நடந்து, அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நன்றி.!
   
பாத்த உடனே எப்டி லவ் வரும்னு கேக்குறியே... அப்ப வீட்ல பாக்குற பையன மட்டும் எப்டி பாத்த உடனே ஒத்துக்குற... கேக்குறவன் கேனைனா கேப்பை ல நெய் 😡
   
உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லி கோவப்பட்டு போன ஆள் திரும்ப வந்து இன்னமும் கோவமா இருக்கேன்னு சொன்னா அது தான் பிரிவில்லா உறவின் அடையாளம்...
   
இசைக்கு... நாடு இனம் நிறம் மதம் மொழி சாதி வசதி ஆண் பெண் ஏன்..... ஜீவராசி பேதம்கூட தேவையில்லை! http://pbs.twimg.com/media/CJ352x-UkAAO0yx.jpg
   
நாடு நாடா ஓடி என்பதுதான் மருவி பிற்காலத்தில் "நாடோடி" எனவும், அதுவே பின் திரிந்து தற்காலத்தில் "நரேந்திர மோடி" எனவும் பெயர் மாற்றம் பெற்றது
   
எதுக்கு சண்டைனே தெரியாம நம்மள சப்போர்ட் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா என்ன பிரச்சனைடா மச்சினு கேட்பவன் தான் நண்பன்.. :-))
   
எல்லாத்துக்கும் ஹாலிவுட் கூடவே கம்பேர் பண்ணுங்க... இந்த இட்லி ஏன் பீஸா மாதிரி இல்லை சார்!! அறிவுஜீவி விமர்சகர்கள்.
   
டாஸ்மாக்கில் குடிகாரர் கூட்டம் குறைய காரணம் என்னன்னு ஆய்வாம். குடிச்சவன்ல பெரும்பாலும் செத்துப்போயிருப்பானுங்க. இதுக்கு எதுக்கு ஆய்வு
   
எனக்கும் சிஎஸ்கே அணிக்கும் சம்பந்தம் இல்லை-சீனிவாசன் # குமாருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை இது என் தமிழ்தாயின் மீது ஆனை
   

0 comments:

Post a Comment