13-ஜூலை-2015 கீச்சுகள்
செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்த முத்துப்பேட்டை பள்ளி மாணவி ஆர்த்தி வாங்க வாழ்த்துவோம் http://pbs.twimg.com/media/CJsuk1zUsAI9Nyv.jpg
   
இந்த மொத்த உலகத்திற்கும் முதுகு காட்டி அமர்ந்து விட முடிவது.. கடற்கரையின் மீதான கூடுதல் ஈர்ப்பு..
   
தெரியாதவன் ஏமாத்துவான்னு தெரிஞ்சவன் கிட்ட போனா, அவன் பெருசா ஏமாத்துவான்.... இதான் சார் உலகம்....
   
பாகுபலி பார்ததுட்டு ஷங்கர திட்டுறவன் நாளைக்கு பக்கத்து ஊட்டு பொண்டாட்டி அழகா இருக்குன்னு தன் பொண்டாட்டிய போட்டு அடிப்பானுவ..#லூசுப்பயலுவ
   
டைட்டானிக் வந்தப்ப டிவிட்டர் இருந்திருந்தா இவனுங்க படகோட்டி படத்த திட்டிட்டு இருந்திருப்பானுங்க...
   
கேரளால மார்கெட் இருக்கும்பானுக .. தெலுங்கு படத்த ரீமேக் பண்ணுவானுக .. ஆனா தமிழன தான் சப்போர்ட் பண்ணனும்பானுக. யாரா நீங்க 😂
   
அடிகளை விட திட்டுகள் வலிக்கத் துவங்கிய நாளில் பெரியவர்களாகிப் போனோம்
   
பெரும் துயரத்தின் போது துரோகிகளின் முன் சிறு துளி கண்ணீர் சிந்தாத அளவுக்கு மன வலிமை இருந்தால் போதும் எதையும் கடந்து விடலாம்..
   
மிக அவசரமாக " A1" பசீடீவ் இரத்தம் 5 யூனிட்கள் தேவை இடம் :- K.M.C.H, கோயம்புத்தூர் தொடர்புக்கு திரு செல்வம் எண் 9751510078
   
அறிவுரை சொல்பவர்கள் இரண்டு வகை 1.நம் தவறை கணிப்பவர்கள் 2.நம்மை தவறாகக் கணிப்பவர்கள். இரண்டாம் வகையினர் கடுப்பேற்றுகிறார்கள்
   
இப்ப நம்ம மக்களுக்கு ரொம்ப தேவைப்படுவது தண்ணியால ஓடுற வண்டியும், ஒரு வாரம் சார்ஜ் நிக்கும் ஸ்மார்ட்போனும்! விஞ்ஞானிகளா, பாத்து செய்ங்கப்பா!
   
இந்திக்காரனுங்க மட்டும் டிரெயின்ல டிக்கெட் எடுத்துருந்தா இந்திய பொருளாதாரம் என்னைக்கோ உயர்ந்துருக்கும்...!
   
தேவதை என்பவள் வேறு யாருமில்லை 'பட்டுசேலை உடுத்திய தமிழச்சியே'
   
"வெயில்" தமிழில் தவிர்க்கவே முடியாத ஒரு திரைப்படம்... பசுபதி என்னும் நடிக அரக்கனுக்கு சிறிதளவேனும் தீனி போட்ட படம்...
   
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் #இனியதுஎன்தமிழ் http://pbs.twimg.com/media/CJuO_SXUsAA00A7.jpg
   
குளத்தில், சலசலக்கும் தண்ணீரை, வாரி மோந்து, முகம் கழுவி, புத்துணர்வு பெறுவதை, அனுபவித்தால் தான் புரியும் ! #கிராமம் http://pbs.twimg.com/media/CJsBjvbUMAAcmxB.jpg
   
உறங்கும் குழந்தையை தான் அதிகமாக கொஞ்சத் தோன்றுகிறது..!!
   
கால் மொளைச்சதும் போதும், சாரை கைலயே பிடிக்க முடிறதுல, ரூம் ரூமா விசிட் அடிச்சிட்ருக்கார்..!! சின்ன மகனதிகாரம்!😊😂😊 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/619891252822081536/pu/img/KvHSpLFXQF8RYV5m.jpg
   
ரோட்ல யாராவது புளி வித்துட்டு வரும்போது Vjபான்ஸ் மூஞ்சிய பாக்கனுமே நமக்கு அறியாம வர்ற சிரிப்ப பாத்து அவனே சிரிச்சிடுறான்
   
ஷங்கர வரலாற்றுப்படம் எடுக்கச்சொல் பாப்போம் ங்கிறானுக. ஏன் ராஜமௌலிய எந்திரன்மாதிரி படம் எடுக்க சொல்றது. அவனவன் ஸ்டைல்ல படமெடுக்க வுடுங்கடா
   

0 comments:

Post a Comment