4-ஏப்ரல்-2015 கீச்சுகள்
ப்ளாட்ஃபார்ம்ல நின்னாதான் கட்டணம் 10 ரூபாயாம். அப்படியே கீழ உட்கார்ந்துட்டா கேட்க மாட்டாங்களாம் பிச்சைக்காரன் சொன்னான்.
   
அஜித் போன்ற நல்ல வழிக்காட்டியை தலைவனாக ஏற்று கொள்வதே உன் மனம் சரியான வழியில் தான் செல்கிறது என்பதை காட்டும்...
   
அசைவம் சாப்பிடுற நாங்க எவ்வளவு பெருந்தன்மையா சைவமும் சாப்பிடுறோம்?!!அந்த பெருந்தன்மை சைவம் சாப்பிடுற உங்ககிட்ட கொஞ்சங்கூட இல்லயே!!!
   
வெகு தூரம் ஓடி வந்ததில் 'நுரை தள்ளுது'... கடல் அலைகளுக்கு!
   
போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும் கடவுளின் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்?
   
செருப்ப சாணில முக்கி அடிச்ச மாதிரி கேட்டான் பாரு கேள்வி 😜 http://pbs.twimg.com/media/CBpSTYnUgAA9gvg.jpg
   
சிலந்தி பூச்சி கடிச்சதும் ஸ்பைடர்மேனா மாறிடுராங்க! அப்படி பார்த்தா நம்ம ஊர்ல எல்லோரும் கொசுவா தான் இருப்பாங்க:))
   
ஒரு சிறிய கிரகத்துக்கு விஷ்வநாதன் ஆனந்த் பெயராம்.. # இதென்ன பெரிய விசயம்.. எனக்கு எங்கூட்ல கெரகம்னு பேர் வெச்சு பல வருஷம் ஆச்சு! ;)
   
இனி ஒரு விவசாயிமற்றொரு விவசாயிக்குஇப்படி கடிதம் எழுதுவார் "இங்கு நான் நிலத்துடன் இருக்கிறேன் ,அங்கு நீ நிலத்துடன் இருக்கிறாயா என அறிய ஆவல்"
   
அஜித்தின் நிஜ வாழ்க்கையை நான் விளம்பரங்களில் வாழ்ந்து பார்க்கிறேன் !!
   
உதயநிதியை நடிக்க வைக்க மாட்டேன்னு ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தா அடுத்து கழக ஆட்சிதான் என்பதில் சந்தேகமில்லை!!
   
நான்:வெண்ணிலா எப்டிக் கொட்டாவி விடுவ??? வெண்ணிலா: ஆஆ.... இட்லியைத் திணிச்சாச்சு :)) #மகளதிகாரம்
   
எல்லா ஆண்களும் புரிந்து கொள்வதில்லை தனக்காக கண்ணீர் சிந்தும் ஒரு பெண்ணின் உண்மையான அன்பினை!!! எ.கீ
   
ஆழம் காணாத கடலில் குதிப்பது தைரியம், குதித்து விட்டு எழுந்து வருவது #தன்னம்பிக்கை
   
மானாட மயிலாட நிகழ்ச்சியை விட அதிக டான்ஸர்களை உருவாக்கியது டாஸ்மாக்.
   
கார் லோன் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போறோம் "இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேன்"
   
எதிர்பார்த்து ஏமாறும் காதலைவிட எதிர்பார்ப்புகள் இன்றி நான் உன்னை காதலிக்கின்றேன் நீயும் என்னை காதலி என எதிர்ப்பார்க்காத ஒருதலைக்காதல் மேல்!
   
'சிலரை ரசனைக்குறைவு' என்று விமர்சிப்பதை அவர்களின் வாழ்க்கைச் சூழலை அறிந்தவுடன் திருத்திக்கொண்டேன்..நிறுத்திக்கொண்டேன்...
   
விதவை தாயை தன் மகனின் கல்யாண சடங்குகளில் முன் நிற்க முடியாமல் செய்த இந்த மத சடங்குகள்தான் துர்பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
   
கிழவன் ரஜினிய விட இந்த தமிழ்நாட்ல ஒரு சந்தர்ப்பவாதிய பாப்பது மிகவும் கடினம். நதி இணைப்பு,தைரியலட்சுமி,வீரப்பனை புகழ்ந்து இகழ்வது,etc.,,,,
   

0 comments:

Post a Comment