24-ஏப்ரல்-2015 கீச்சுகள்




உங்களுக்கு விருப்பமானவர் இன்னொருவரை விரும்பும் போது வரும் கோப அளவும் விருப்பத்தின் அளவும் சமானம்.
   
'நீ ஜட்டி போடுறதுக்கு முன்னாலையே, நான் டீச்சர் கைய புடிச்சு இழுத்து முட்டி போட்டவன்டா' moment # Nehra vs Kohli http://pbs.twimg.com/media/CDN2QcsUUAAimg5.jpg
   
நீ நீயாக இரு.. நான் நானாக இருக்கின்றேன் என்பதல்ல காதல்.. நீயும் நானும் நாமாக இருப்போம் என்பதே காதல்...
   
என்னோட பாலோவர்ஸ் யார் யார் வேலை தேடிட்டு இருக்கீங்க ? என்ன வேலை வேண்டும் ? டி.எம் ல சொல்லுங்க என்னால முடிஞ்சத செய்யறேன் !!
   
#ஆத்விக் அஜித்குமார் 👌 பெயர் சூட்டப்பட்ட நாள்தனிலேயே உன் பெயரை உலகறியும் வரம் பெற்றாய் 😍 அனைத்தும் உன் தந்தையையே சேரும் 🙏 #AadvikAjithKumar
   
இவன்/ள் இனி எக்காரணம் கொண்டும் நம்மைவிட்டு விலகமாட்டான்/ள் என்று உறுதியாக தெரிந்தபின், அலட்சியத்தை ஆரம்பிக்கிறோம்.
   
டிவிட்டரில் மட்டும் தமிழ் தட்டச்சு இல்லாமல் இருந்திருந்தால் நான் இங்க எட்டி பாத்துட்டு அப்படியே போயிருப்பேன் என்பவர்கள் RT ப்ளீஸ்
   
தட்டிக் கொடுத்து முன்னேற்றுபவர்களைவிட உசுப்பேத்திவிட்டு அடி வாங்க வைப்பவர்கள்தான் இந்த உலகில் அதிகம்!
   
நான் எழுதியதில் என் அம்மாக்கு ரொம்ப புடிச்ச கவிதை ..... எனது வரிகள் 😍😍😍 உயிருக்குள் ஓர் உயிர் ...😘😘😘 http://wp.me/p5U9Uf-1h
   
''முதுமை எனக்கு வராது, இளமை எனக்கு போகாது'' வரி விஜய்க்கு தான்ய்யா பொருந்தும், ஆளு பல வருஷமா அப்டியே தான்ய்யா இருக்காரு :-/
   
தங்களுடைய வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறையும்போது அடுத்தவர் வாழ்க்கையை அலசி ஆராயப்படுகிறது!!!
   
கல்விக்கும் கலவிக்கும் கடவுளுக்கும் பள்ளியறை என்ற பெயர் வைத்தவனே ரசனாவாதி
   
நீ தான் டா இந்த உலகத்துலயே அழகு! என் ராஜா ,என் கண்ணு! இப்டி எல்லா அப்பாவும் சின்ன வயசுல சொல்வாங்க,அனா உங்கப்பா பொய் சொல்லல #AadvikAjithKumar
   
தொடுவானில் ஓர் தீப்பிழம்பு ,இன்றைய விடியல் #myclick 😊😊 http://pbs.twimg.com/media/CDPX6VEUIAAFE09.jpg
   
அவசியம் இல்லாதவர்களிடம் உண்மை சொல்லாதீர்கள் அவசியமானவர்களிடம் பொய் சொல்லாதீர்கள் இரண்டுமே உங்களை காயப்படுத்தும் -பபி
   
மனைவி மகிழ்ச்சியாக இல்லாத குடும்பமும்,விவசாயி மகிழ்ச்சியாக இல்லாத தேசமும் நிச்சயம் முன்னேற முடியாது...
   
இரத்தத்தில் ஜாதியைப் பார்த்தால் நம் தேவைக்கு பயன்படுத்த முடியாது என்ற சுயநலத்தாலோ என்னவோ "ஆபத்திற்கு பாவமில்லை" என்றான் மனிதன் . .
   
இதெல்லாம் ஓவியம்னு சொன்னா பிரஷ் கூட நம்பாது! #வெல்டன்வெங்கட் http://pbs.twimg.com/media/CDSXrKpWgAA7t7d.jpg
   
பத்து நாளா ஒரே கடையில சாப்பட்றேன்.. இன்னைக்கு சில்லறை இல்லன்னதும் நாளைக்கு குடுங்கன்னுட்டாரு நாட்டுல மழை பெய்யறதுக்கு காரணமான ஒருத்தர்! ;))
   
பால்ல தண்ணி கலந்தா கோபப்படுற அதே சமூகம்தான் மால்களில் பெப்சில ஐஸ்கட்டி போட்டு கொடுத்தா சிரிச்சுக்கிட்டே வாங்கிக்கிது..
   

0 comments:

Post a Comment