19-ஏப்ரல்-2015 கீச்சுகள்




திருப்பூரில் ஒரு அரசுப் பள்ளியின் நல்ல முயற்சி.. இதை அனைத்து அரசு பள்ளிகளும் பின்பற்றலாமே.. RT please.. http://pbs.twimg.com/media/CC3PM6xUUAAR0ib.jpg
   
தோனி கேப்டன்சியின் பெரிய சாதனை worldcup, T20 worldcup வாங்குனதில்ல; நெஹ்ராவையே man of the match வாங்க வச்சது தான்
   
முறைப்படி மணிரத்னம் வைத்திருக்க வேண்டிய.டைட்டில்.= ஓ!,கமல்,கவுதமி"
   
தலையில கொஞ்சமாவது எண்ணெய் தேயுடானு அம்மா சொல்லும் போது முடியாதுனு சொன்னவன் எல்லாம், இப்ப எர்வாமாட்டின் வாங்கி தேய்ச்சுகிட்டு இருக்காங்க!
   
இளகிய மனம் கொண்டவர்கள் இதைத் தொடர்ந்து படிக்க வேண்டாம்.... நள்ளிரவு நேரம், காடாய் இருந்திருந்தால், (cont) http://tl.gd/n_1slqhi3
   
காதலிக்க மறுத்த காரணத்தால் ஆஸிட் வீச்சில் பார்வையிழந்த பெண்ணை கரம் பிடித்த வாலிபர்-ஜார்கண்டில்... #வாழ்கவளமுடன்!!! http://pbs.twimg.com/media/CC48M8fUkAI9uob.jpg
   
இந்நூற்றாண்டின் இரு பெரும் வரலாற்றுப் பிழைகள்: 1.பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக்கியது. 2.அம்பேத்கரை ஒரு ஜாதிக்கான தலைவராக்கியது.
   
"காரில் இடமில்லை" என்று சொந்தக்காரர் சொல்வதை உட்சபட்ச அவமானமாகக் கருதுபவன் மிடில்கிளாஸ்காரன்.
   
உன் அப்பாவுடன் மணிக்கணக்கா பேச என்ன இருக்குது என்கிறார் என்னவர்.. நாளை அவர் மகள் பேசமாட்டாளோ என ஏங்கும் போது தான் விடைகிடைக்கும் அவர்க்கு
   
பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையை கொளுத்திய கர்நாடகவினர் # அவிங்க கொளுத்தினது உருவபொம்மைய இல்ல ஒரு பொம்மையோட உருவம்னு நமக்குதான் தெரியும் !!
   
பாரதிராஜா, பாலா, அசோக் குமார் காட்ட முடியாத காட்சி இது - நன்றி - நேசமித்திரன் http://pbs.twimg.com/media/CC35QYWUIAAYWQ7.jpg
   
ஒரு டாஸ்மாக் மதுக்கடைக்கு 6- 7 ஊழியர்களை நியமிக்கும் அரசு 5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர்களை நியமிப்பதிலிருந்தே கல்விக்கு எந்த அளவுக்கு? #Fact
   
: 1986ல மௌனராகம், 2000ல அலைபாயுதே, 2015ல ஓ காதல் கண்மணி. ஆனா இந்த மனுஷனோட சிந்தனையும் ரசனையும் இன்னும் இளமையா தான் இருக்கு! #ManiRatnam
   
முதல் தோசையும் முதல் காதலும் பர்ஃபெக்ட்டா இருக்கவே இருக்காது! ;-))
   
நமது கஷ்டங்களை பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு பிறருக்கு உதவுவதே 'தனக்கு மிஞ்சி தர்மம்'என்பது. வறுமையிலும் செம்மை http://pbs.twimg.com/media/CC3_9A2UMAA8Kyw.jpg
   
யாருக்கும் தெரியாமல் தொலைந்து போகவேண்டும்!... என்பதில் அந்த 'யாருக்கும்' என்பது பெரும்பாலும் வெறும் பத்து பேரைக்கொண்ட பட்டியல் தான்.
   
48 வயது ரஹ்மான்,58 வயது மணி,61 வயது வைரமுத்து,59 வயது பி.சி. சேர்ந்து தமிழுக்குக் காதல் படம் தரும் நிலையில்தான் தமிழ்த்திரை இருக்கிறது..#okk
   
புண்ணியம் தேடுங்கள்... சொர்கத்தில் இலவச WiFi இணைத்து தருகிறேன்.
   
தகவல் தெரிந்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் - 00918098373918 http://pbs.twimg.com/media/CC1q4wIVEAAYdWz.jpg
   
பெண்ணின் திமிரை அழகென்று யார் வர்ணிக்கிறார்களோ அவர்களே சிறிது நாட்களுக்கு பின் அடங்காப்பிடாரி என்று சொல்வார்கள்...!!
   

0 comments:

Post a Comment