20-ஏப்ரல்-2015 கீச்சுகள்




சின்ன வயசில சில்லரை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம், இப்ப சில்லரை இல்லைனா சாக்லேட் திங்க வேண்டியதா இருக்கு:-/
   
அம்மா..கொஞ்சம் கெட்டுப்போன வாசனை மாதிரி இருக்கும்மா... அப்படியாப்பா..வெச்சுடு... நான் சாப்பிட்டுக்கிறேன்.. #இதைக்கேட்காமல்வளர்ந்தவருண்டா..
   
வெளிப்படுத்தாமலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டுமென நினைக்கிறாள் பெண். புரிந்து கொண்டாலும் வெளிப்படுத்துவதில்லை ஆண்.
   
யாருடைய ஒரு முதல் கேள்விக்கும் புன்னகையுடன் பதில் அளியுங்கள்.. அடுத்தடுத்த கேள்விகளில் அவர் உங்கள் நண்பராய் மாறியிருப்பார்.
   
அதிகாலையில் துயில் களைந்து அலங்கோலமாய் கிடக்கும் மனைவியை ரசிப்பவன் கணவனில் இருந்து காதலனாகிறான்.
   
பெண்களே,ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்!ஆண்களே,நேசித்தவள் துரோகமே செய்தாலும் போட்டோக்களை வெளியிடாதீர்கள்!#வாட்சப் வருத்தங்கள்
   
அபிஷேக் பச்சனோட மனைவிய ரசிச்சா அது ரசனையாம்., எதுத்த வீட்டுக்காரர் மனைவிய ரசிச்சா அது காமமாம்., நல்லா இருக்குயா உங்க லாஜிக்!
   
எதார்த்தமா பேசுபவர்கள் பாலோயர்ஸ் பார்த்து பேச மாட்டார்கள். பாலோயர்ஸ் பார்த்து பேசுபவர்கள்எதார்த்தமா இருக்கமாட்டார்கள்.
   
அஜித் காசு வாங்காம நடிக்கிறாரானு கேக்குறானுங்க ...காசு வாங்கிட்டுத்தான் நடிக்கிறார் ஆனா காசுக்காக நடிக்க மாட்டார் .
   
"தமிழ் இயல்பிலேயே ஆண்மையான மொழி. அழகான ஒரு ஆணுக்கு மகள் அவன் சாயலில் இருந்தால் பேரழகியாக இருப்பாள்.அதுதான் மலையாளம்.."-ஜெயகாந்தன் #ThanxJemo
   
உங்க பையன் என்னங்க பன்றான்..? ம்ஹூம் பிரதமரா இருக்கான் ! வாட் யூ மீன்...? யோவ்! ஊரை சுத்துறான்யா.. 😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂 😂😂😂😂
   
அம்மா அப்பா காலில் விழுந்து வணங்க வெட்கப்படும் ஒரு தலைமுறை உருவாகிவருகிறது.
   
என்னுடைய கைவண்ணத்தில் #ஜரிகை_பட்டு #கைத்தறி #நெசவு http://pbs.twimg.com/media/CC5Gm22VAAAqzOF.jpg
   
நட்பில் இதற்குமேல் நெருங்கிச் செல்ல முடியாதா என ஏங்கிடும் தருணத்தில் காதலைச் சொல்லிடனும்
   
தாலி கட்டி வாழ்ந்தா- அலைபாயுதே தாலி கட்டாம வாழ்ந்தா- ஓகேகண்மனி தாலி கட்டியும் வாழாம இருந்தா- மெளனராகம் தாலிய அறுத்தா- அசல் ஆழ்வார் எஅ வீரம்
   
ட்விட்டரில் சிலருள்ள கான்வோக்கள் பாக்கும்போது இப்டிதான் இருக்கு # அது ஒரு அழகிய கனாக்காலம்.. ட்விட்டர்லயே வாழ்ராய்ங்க http://pbs.twimg.com/media/CC8d0i3UMAApjHC.jpg
   
அழுகை கோழைத்தனமானது தான், ஆனால் நீயற்ற இந்த வெறுமையை வேறெப்படி வெளிப்படுத்துவது....
   
'வாழ்த்துகள்', 'வாழ்த்துக்கள்' எது சரி? 'வாழ்த்துகள்' என்பதே சரி. வன்தொடர்க் குற்றியலுகரத்தோடு 'கள்' விகுதி சேரும்போது ஒற்றுமிகுதல் கூடாது
   
ஒரு மேட்ச் தோத்தத, ஒரே ஒரு மேட்ச் மட்டும் ஜெயிச்ச வெண்ணைகளும், ஒரு மேட்ச் கூட ஜெயிக்காத மொன்னைகளும் கிண்டல் பண்ணுதுங்க ;-)
   
பாய் ஃப்ரண்ட் என்பவன் படம் பார்க்கும்போது செக்யூரிட்டியாகவும், இண்டர்வல் போது சர்வராகவும், படம் முடிந்ததும் ட்ரைவராகவும் செயல்படுபவன் ஆவான்!
   

0 comments:

Post a Comment