Eligibility

நுண்பதிவுத் திரட்டி, RT_tamil கணக்கில் வெளிவரும் மறுகீச்சுகளின் தேர்வு கீழ்கண்ட விதிகளின் படி தானியங்கியால் செய்யப்படுகிறது.
  1. கடந்த 48 மணிக்குள் கீச்சப்பட்டவையாக இருக்க வேண்டும்.
  2. பொதுவாகவே பிரபலங்கள் எது கீச்சினாலும் உடனே பலரால் மறுகீச்சப்படும் என்கிற காரணத்தால் அரசியல், சினிமா பிரபலங்களின் அத்துறைச் சார்ந்த கீச்சுகளைத் தவிற்க முயல்கிறது.
  3. இணைய செய்தி ஊடகங்கள், இணையத்தள விளம்பரக் கீச்சுகள் போன்றவை பொதுவாக வணிகரீதியானவையாகையால் அவையும் தவிற்க முயல்கிறது
  4. நச்சுக் கணக்குகள்(spam), பொதுவில் வைக்கமுடியாத கணக்குகள் போன்றவை நீக்கப்படுகிறது.
  5. கீச்சுகளில் பிற ஒருங்குறியைவிட தமிழ் ஒருங்குறி 50%க்கு மேல் இருக்க வேண்டும்.(அதாவது அதிக பிறயெழுத்துக்கள் அல்லாத தமிழ்க் கீச்சு)
  6. அவை குறைந்தது பதினேழு வெவ்வேறு நபர்களால் விரும்பப்பட்டிருக்க(RT or Fav) வேண்டும்.
  7. வெவ்வேறு கீச்சர்களின் கீச்சுகளை மறுகீச்சிட்டவர், அதிக பின்தொடர்பவர்கள் கொண்டவர் போன்றோரின் தேர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது
  8. ஒருவரின் கீச்சுகளே அதிகமாகக் கிடைத்தால் அதில் பிரபலமான கீச்சுகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  9. இதன் செயற்கை நுண்ணறிவால் சினிமா ரசிகர்களின் அலப்பறைக் கீச்சு என்று கணித்தால் தவிர்த்துவிடும்.
  10. கருத்துத் தணிக்கை இல்லை என்றபோதும் குறிச்சொல் அடிப்படையில் ஒரே கருத்து சார்ந்த கீச்சுகள் அதிகமாக வரும்போது கட்டுப்பாடுகள் உண்டு.
  11. பலருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டியும், சொந்தக் கீச்சுகளுக்கு முன்னுரிமை வழங்கவும், தானியக்கத்தில் முடிந்த சில சோதனைகளும் உண்டு


மேல்கொண்ட விதிகளின் நோக்கம் சிறந்த, சுவாரசிய, சூடான, ரசிக்கும் படியான கீச்சுகளைப் எச்சார்புமின்றி தொகுப்பதேயன்றி யாரையும் புறக்கணிக்கும் நோக்கமல்ல. ஆனால் எல்லையில்லாத டிவிட்களை அலசும் போது சில நல்ல கீச்சுகள் விடுபடவும் வாய்ப்புள்ளது. சிறந்த கீச்சுகளைத் தேர்வு செய்ய உங்கள் ஆலோசனைகளை neechalkaran at gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம் தானியக்கத்தில் அவையும் சேர்க்க முயற்சி செய்யப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
எனது கீச்சு இதில் இடம் பெற நான் என்ன செய்யவேண்டும்? இக்கணக்கைப் பின்தொடரவேண்டுமா?
பின்தொடரவேண்டிய அவசியமில்லை. தமிழ் எழுத்துருவில் குறைந்தது 17 அதிகபட்சம் 57 நபராவது விரும்பும் (RT or Fav) வகையில் டிவிட் எழுதினால் போதும்.

RT_Tamil கணக்கின் நோக்கம் என்ன?
தமிழில் வெளிவரும் சிறந்த கீச்சுகளை கீச்சர்கள் ரசனைக்கு ஏற்ப திரட்டித் தருதல். நடுநிலை சமூகத்தள ஊடகமாக விளங்குதல். தமிழ்க் கீச்சர்களின் திறமையை மேடையேற்றுதல்.